திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே மழை வேண்டி ஜீவநதி அமைப்பு சார்பில் வருணபூஜை நடந்தது.விழுப்புரம் மாவட்டம் அரசூர் வழியாக கடலூர் மாவட்டம் கட்டமுத்துபாளையம் வரை மலட்டாறு செல்கிறது. கடந்த 1972ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் போது மணல் திட்டுகள் ஆங்காங்கே உருவானதால் நீர் வரத்து முற்றிலும் தடைபட்டது."ஜீவநதி மலட்டாறு நிலத்தடிநீர் மேம்பாட்டு எழுச்சிக்கூடல் என்ற அமைப்பின் மூலம் ஆறு தூர் வாரப்பட்டு நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட் டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.அதே சமயம் ஜீவநதி அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மழை வேண்டி வருணபூஜையும் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் காலை அரசூர் மலட்டாற்றில் அமைப்பின் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் வருணபூஜை நடந்தது. குருக்கள் வெங்கடேசன், செந்தில் ஹோமங்கள் நடத்தினர். பின், ஆற்றில் பூஜை செய்யப்பட்ட கலசத்தின் தண்ணீர் ஊற்றப்பட்டது.அப்போது ஆனத்தூர், திருத்துறையூர், சேமங் கலம், கட்டமுத்துப்பாளையம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் மற் றும் பலர் பங்கேற்றனர்.