பதிவு செய்த நாள்
17
அக்
2013
11:10
பேரூர்: பச்சாபாளையம் சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (18ம் தேதி) நடக்கிறது. கும்பாபிஷேக விழா, இன்று (17ம்தேதி) மாலை திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து, அனைந்து வழிபாடு, காப்பு அணிவித்தல், விநாயகருக்கு முதல்கால வேள்வி, திரவியாகுதி, திருமுறை விண்ணப்பம், மகாதீபாராதனை நடக்கிறது. இரவு 10.00 மணிக்கு எண்வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை காலை 6.00 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை நடத்தப்பட்டு, இரண்டாம் கால வேள்விகள் நடக்கிறது. தொடர்ந்து, பேரொளி வழிபாடு, மகாதீபாராதனை செய்யப்பட்டு, 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள் தலைமையில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து, பெருந்திருமஞ்சனம், அலங்கார பூஜை, தசதரிசனம், தசதானம் நடக்கிறது. வேள்வி வழிபாடுகளை, பிள்ளையார் பீட வேள்விக்குழு செய்துள்ளது.