வேலூர்: வேலூர் மாவட்டம் ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பெருமாளுக்கு திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடைபெற்றன. இதில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தசுவாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புப் பூஜை செய்தனர்.