திருவாடானை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2013 12:10
ராமநாதபுரம்: திருவாடானையில் வடக்குத் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் முளைப்பாரித் திருவிழா வருடம் தோறும் கொண்டாடப்படுகிறது. வஇந்த வருடம் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இதில் அம்மனுக்கு ஒவ்வொரு நாள் இரவும் சிறப்பு பூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன. கடந்த புதன்கிழமை காலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து தெப்பகுளத்தில் விட்டப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.