கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இதை யொட்டி சைவ மற்றும் வைணவ கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெறும். இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நகரில் உள்ள முக்கிய சைவ, வைணவ கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழி பாடுகள் நடத்தப்பட்டு வந் தது. விழாவின் கடைசி நாளான ஆயுத பூஜை அன்று பழையபேட்டை நரசிம்ம சாமி கோவில் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில், ராமர் கோவில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், திருநீலகண்டர் கோவில், பழைய பேட்டை சீனிவாசர் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், காட்டி நாயனப்பள்ளி சுப்பரமணிய சாமி கோவில் மற்றும் கார்வே புரம் கல்கத்தா காளிக்கோவில் உள்பட 11 கோவில்களில் இருந்துசுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா வரும் காட்சி நடைபெற்றது. அப் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் 11 தெய்வங்களையும் ஒரே இடத்தில் பக்தி பரவசத் துடன் தரிசனம் செய்தனர்.