பதிவு செய்த நாள்
18
அக்
2013
10:10
பழநி: பழநி மலைக்கோயில், யானைப்பாதை, படிப்பாதையிலுள்ள கடைகள் அக்., 23 ல் அகற்றபடவுள்ளதாக, கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் தெரிவித்தார். பழநி மலைக்கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்குசெல்கின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், படிப்பாதை, யானைப்பாதையில் கடைவைத்துள்ளவர்கள், பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து, இந்து அமைப்பினர், பக்தர்கள் சார்பில், கோயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. மேலும் கடைதாரர்கள், குத்தகை காலம் முடிவடைந்துள்ளதால், பக்தர்கள் வசதிக்காக, யானைப்பாதை, படிப்பாதைகளிலுள்ள 17 கடைகளையும் அகற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பழநிகோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்;""பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, அக்., 23 முதல் படிப்பாதை, யானைப்பாதையிலுள்ள கடைகள் படிப்படியாக அகற்றப்படவுள்ளது, என்றார்.