பதிவு செய்த நாள்
18
அக்
2013
11:10
திருப்போரூர்: நந்தம்பாக்கம் படவட்டம்மன் கோவிலில், தசரா விழா இன்று நடக்கிறது.திருப்போரூர் அடுத்த மேலையூர் நந்தம்பாக்கம் படவட்டம்மன் கோவிலில், 37ம் ஆண்டு தசரா விழா, இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. காலை 9:00 மணியளவில் பால்குட அபிஷேகம், 12:00 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6:00 மணியளவில் தீமிதி விழா நடைபெறுகிறது. இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு பறந்து வந்து மாலையிடுதல் மற்றும் வீதியுலா உற்சவம் நடக்கிறது. தண்டலம் செல்லியம்மன் கோவிலில், பவுர்ணமி மற்றும் மாத பிறப்பையொட்டி ஊஞ்சல் சேவை மாலை, 6:00 மணிக்கு நடைபெறுகிறது.
மேலும் தகவலுக்கு...எண்ணெய் பனை பயிரிட விரும்புவோர், அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம். விவரங்களை, 93448 48234 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.பெரும்பான்மை தரிசுமாவட்டத்தில், 6.2 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் உள்ளன. இதில், 29 ஆயிரம் ஹெக்டேரில் நெல் மற்றும் கரும்பு பயிரிடப்படுகின்றது; 6,420 ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி நடக்கிறது; 75 ஆயிரம் ஹெக்டேர் களர் மற்றும் உவர் நிலங்களாக உள்ளன; மற்ற நிலங்கள் தரிசாக உள்ளன.