பதிவு செய்த நாள்
18
அக்
2013
11:10
கும்மிடிப்பூண்டி: பஞ்ஜேஷ்டி, ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று மாலை அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.சோழவரம் அருகே, பஞ்ஜேஷ்டியில் அமைந்துள்ள ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள, சுயம்பு லிங்கத்தை அகத்திய முனிவர், பல காலமாக வழிபாடு செய்ததால், அகத்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.இத்திருத்தலத்தில், இன்று மாலை, 6:00 மணியளவில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது. மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், துாப தீப ஆராதனைகள் நடைபெறும். இதேபோன்று அரியத்துரை வரமூர்த்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி சந்திரசேகரேஸ்வரர், சுண்ணாம்புக்குளம் காளத்தீஸ்வரர், அய்யர்கண்டிகை அவிநாசியப்பர், சாலை கொடுமுடிநாதர் உள்ளிட்ட சிவஸ்தலங்களில் இன்று மாலை அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.