உத்தரகோசமங்கையில் அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2013 04:10
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற மங்களநாதர் சுவாமி கோயில் உள்ளது.பவுணர்மி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தினால் உணவு பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகம்.ஆகவே ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பவுணர்மி தினத்தன்று அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இன்று பவுணர்மியை முன்னிட்டு சிவாச்சாரியார் ராஜாமணி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதை தொடர்ந்து 101 படி அரிசியில் சாதம் தயாரிக்கப்பட்டு சுவாமிக்கு அன்னதானம் செய்யப்பட்டது.காய்கனிகளில் ஆன மாலை அணிவிக்கப்பட்டு,எள் உருண்டை.முருக்கு,வடை, அப்பம், நெய்வேத்யம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.திவான் மகேந்திரன்,செயல் அலுவலர் சுவாமிநாதன்,பேஷ்கார் சேகர்,ஸ்ரீதர் ஏற்பாடுகளை செய்தனர்.