திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா நவ. 3-ல் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2013 11:10
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா நவம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது. 8-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு <உச்சிகாலம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும். மாலை 4.35 மணிக்கு மேல் சூரசம்காரம் நடைபெறும்.