மேலநரசிங்கநல்லூர் பிரசன்னவெங்கடாஜலபதி கோயிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 11:10
திருநெல்வேலி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பில் மேலநரசிங்கநல்லூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உழவாரப்பணி நடந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் உழவாரப் பணி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மேலநரசிங்கநல்லூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உழவாரப்பணி நடந்தது. இதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோர் கோயிலின் உட்பிரகாரம், மேற்கூரை பகுதிகளை சுத்தம் செய்தனர். மேலும் வெளிபிரகாரத்தில் அடர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சாந்தா, செயலாளர் இளங்கோ, வேள்விகுழு தலைவர் ராமையா, பேட்டை மன்ற தலைவர் லோகாம்பாள், சுத்தமல்லி மன்ற தலைவர் உமாபதி உட்பட பலர் கல்நது கொண்டனர். ஏற்பாடுகளை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நெல்லை வட்ட தலைவர் பாலா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் பக்தர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.