கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோயில் புதிய மேல்சாந்தி தேர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 12:10
கோவை: சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோயில் 2013-14ம் ஆண்டிற்கான புதிய மேல்சாந்தியை திருவுளச்சீட்டின் மூலமாகத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெற்ற புதிய மேல்சாந்தி நேர்முகத் தேர்வில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் எம்.பி.அஜய்கிருஷ்ணன் நம்பூதிரி புதிய மேல்சாந்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 2011-12இல் மேல்சாந்தியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.