பதிவு செய்த நாள்
21
அக்
2013
12:10
கும்பகோணம்: மகாமக குளத்தின் உள்ளே வாயு, கங்கா, பிர்மா, யமுனை, குபேர, கோதாவரி, ஈசானிய, நர்மதை, சரஸ்வதி, இந்திர, அக்னி, காவேரி, யம, குமரி, நருதி, பயோனி, தேவ, வருண, சரயு, கன்யா என 20 வகையான தீர்த்த கிணறுகள் உள்ளன. மேலும் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகைலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோனேஸ்வரர், பக்திகேஸ் வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாமகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மனேஸ்வரர், கங்காதேஸ் வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தலபாலேஸ்வரர் என மொத்தம் 16 வகையான சிவ லிங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடசமகாலிங்க சுவாமிகள் என அழைப்பது வழக்கம். இத்தகைய சிறப்புபெற்ற இந்த 16 சோடச மகா லிங்கங்களுக்கும் நேற்று காலை ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபி சேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.