தென்காசி: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து நேற்று காலை 5 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு கோயிலில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களுக்கு திருவிழா சிறப்பாக நடக்கவுள்ளது. மேலும் வரும் 29ம் தேதி தேரோட்டமும் 31ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.