திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழனி கோயிலில் அருள்மிகு முருகப்பெருமானின் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் திங்கள்கிழமை வந்ததால், மலைக்கோயில் சன்னிதி அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் கூட்டத்தை முன்னிட்டு திருக்கோயில் சார்பில் கூடுதல் சுகாதாரம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன.