பதிவு செய்த நாள்
23
அக்
2013
10:10
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாவையொட்டி 27ம் தேதி சிறப்பு ரத உற்சவம் நடக்கிறது. சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு ரத உற்சவம் நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி உளுந்தூர்பேட்டை வரும் ரதத்திற்கு சாரதா ஆசிரமம் சார்பில் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டை பகுதிகளிலுள்ள 150 கிராமங்களுக்கும் சாரதா ஆசிரமம் சார்பில் 9 ரத உற்சவம் உலா வருகிறது. ஊட்டி ராமகிருஷ்ண மடம் தலைவர் ராகவேஷானந்தஜி மகராஜ் துவக்கி வைக்கிறார். குமரகுரு எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர் மாலை அணிவிக்கின்றனர். அன்று காலை 11 மணிக்கு ஆசிரம வளாகத்தில் சென்னை தர்ம ரஷண சமிதி மாநில செயலாளர் கிருஷ்ண ஜெகந்நாதன் சிறப்புரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு சென்னை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம யதுநாதானந்தஜி மகராஜ் ரதத்திற்கு ஆரத்தி எடுக்கிறார். மதியம் 2.45 மணிக்கு யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா அறிமுகவுரையாற்றுகிறார். ராகவேஷானந்தஜி மகராஜ், அனந்தானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்குகின்றனர். இறையன்பு ஐ.ஏ.எஸ்., யதுநாதானந்தஜி மகாராஜ், யத்தீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா, எஸ்.பி., மனோகரன் பேசுகின்றனர். அபிராமானந்தஜி மகாராஜ் தலைமையுரையாற்றுகிறார். 28ம் தேதி உளுந்தூர்பேட்டை பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்களில் ரத உற்சவம் நடக்கிறது.
மாவட்டத்தில் ரத உற்சவம்: மாவட்டத்தில் வரும் 27ம் தேதி உளுந்தூர்பேட்டை, 28ம் தேதி உளுந்தூர்பேட்டை கிராமங்கள், 29ம் தேதி திருவெண்ணைநல்லூர், திருக்கோவிலூர், 30,31ம் தேதிகளில் விழுப்புரம், 3ம் தேதி திண்டிவனம், 4ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 5ம் தேதி கச்சிராயப்பாளையம் பகுதி வழியாக ஆத்தூர் கணையனூர் பகுதிககு ரத உற்சவம் செல்கிறது.