பதிவு செய்த நாள்
23
அக்
2013
10:10
ஆத்தூர்: ஆத்தூர் சோமநாதசுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடியேற்றத்தையொட்டி அபிஷேக அலங்கார பூஜையும், இரவில் திருவீதி உலாவும் நடந்தது. 29ம் தேதி காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் உலாவும், 30ம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் புறப்பாடும், மதியம் 3.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், மாலை 5 மணிக்கு காட்சி மற்றும் மாலை மாற்றுதலும், இரவு 10 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், 31ம் தேதி காலை 5 மணிக்கு பட்டிணப்பிரவேசமும் நடக்கிறது. திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன், தக்கார் கணபதிமுருகன், கணக்கர் பாலகிருஷ்ணன், மணியம் சரவணபவன், மண்டகபடிதாரர் ராஜேந்திரன், பட்டர் ஹரிஹரசுப்பிரமணியன் ஜனா, ஆத்தூர் பஞ்., தலைவர் முருகானந்தம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.