காஞ்சி காமாட்சியம்மன் உண்டியல் வசுல்: 2 மாதத்தில் ரூ.30.92 லட்சம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2013 11:10
காஞ்சிபுரம்: காமாட்சியம்மன் கோயில் உண்டியல் 2 மாதத்துக்கு ஒருமுறை இந்து அறநிலையத் துறையால் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி காமாட்சியம்மன் கோயில் உண்டியல் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது. இறுதியில் ரூ. 30 லட்சத்து 92 ஆயிரத்து 267 கிடைத்தது. இது தவிர 205 கிராம் தங்கம், 280 கிராம் வெள்ளி ஆகியனவும் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.