திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு விழாவில் பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளில் சில குறைபாடுகள் இருந்தன. அவற்றைப் போக்க இவ்வாண்டு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 3-ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.