காலபைரவர் சிவ அம்சம் கொண்டவர். இவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. ஞாயிறன்று ராகுவேளையில் (மாலை 4.30-6 மணிக்குள்) வழிபடுவர். எதிரி பயம், மனக்குழப்பம், கடன்தொல்லை, தொழிலில் பிரச்னை, திருஷ்டி தோஷம் நீங்க இவரை வழிபடுவர். "கால என்றால் "கருப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். சிவனுக்கு "காலகண்டன் என்ற பெயருண்டு. விஷம் குடித்ததால் கருநீல நிற கழுத்தைக் கொண்டவர் என்பது இதன் பொருள். பைரவரும் கரியவரே.