இதுவும் கடந்துபோகும் என்றும் கூட இதைச் சொல்வதுண்டு. வாழ்வில் நல்லதும், கெட்டதும் மாறி மாறியே நடக்கிறது. நன்மையைக்கண்டால் கூத்தாடுவதும், சிரமப்பட்டால் துவண்டு விடுவதும் மனித இயல்பு. ஆனால், எந்த நிலையிலும் "எல்லாம் சிலகாலம் என்று சம பாவத்தோடு தாமரை இலைத் தண்ணீர் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மகான்கள்.