வத்திராயிருப்பு: சுந்தரபாண்டியம் வைகுண்ட மூர்த்தி சுவாமி கோயிலுக்கான புதிய வீடியோ "சிடி வெளியீட்டு விழா, கோயிலில் நடந்தது. வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம் கிராமம் அருகேயுள்ளது வைகுண்டமூர்த்தி சுவாமி கோயில். இப்பகுதியை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னரால், 600 ஆண்டுகளுக்கு முன் இது கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இக்கோயில் சிதிலடைந்து கிடந்தது. பக்தர்கள் நன்கொடை, அரசு நிதிஉதவிமூலம் , 2 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அக்கோயிலுக்கான வரலாற்றை தெரிவிக்கும் வகையில் பாடல்களுடன் கூடிய புதிய வீடியோ "சிடி வெளியிடப்பட்டது. இதற்கான வெளியீட்டு விழா, முன்னாள் தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. செயல்நிர்வாகி ஹரிஹரன் முன்னிலை வகித்தார். கோயில் நிர்வாக அதிகாரி அஜீத் வரவேற்றார். புதிய "சிடியை பழனிச்சாமி வெளியிட அஜீத் பெற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. பக்தசபா உறுப்பினர்கள் திருமுருகன், நல்லாசிரியர் வைகுண்டம் உட்பட பலர் வாழ்த்தினர். பக்தசபா பொருளாளர் பூமாலை நன்றி கூறினார்.