பதிவு செய்த நாள்
26
அக்
2013 
11:10
 
 நாமக்கல்: நாமக்கல்-மோகனூர் சாலை, ஐயப்பன் கோவில் அருகில் உள்ள, வல்லப விநாயகர், ராஜராஜேஸ்வரி கோவில்களில், மண்டல அபிஷேக நிறைவு விழா, நாளை (அக்., 27) கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, காலை, 7.30 மணிக்கு, விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம் நடக்கிறது. 9.30 மணிக்கு மகா அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகமும், பகல், 12 மணிக்கு, அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, இரவு, 7 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, 7.30 மணிக்கு, ஆன்மிக அரங்கம் என்ற தலைப்பில், பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில், இந்திரா, மகேசுவரி ஆகியோர் பங்கேற்கும் கருத்தரங்கு நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.