பதிவு செய்த நாள்
28
அக்
2013
10:10
தஞ்சாவூர்: சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் நடப்பாண்டு கந்தசஷ்டி விழா வரும், 2ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக துவங்குகிறது. தஞ்சை பூக்கார தெருவில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமர்சையாக நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டும் கந்தசஷ்டி விழா, வரும், 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா நவ., 13ம் தேதி வரை நடக்கிறது. துவக்க நாளான, 2ம் தேதி காலை, 11 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மூன்றாம் தேதி இரவு, 7 மணிக்கு ஸ்வாமி அன்ன வாகனத்திலும், 4ம் தேதி மான் வாகனத்திலும், 5ம் தேதி பூத வாகனத்திலும், 6ம் தேதி யானை வாகனத்திலும், 7ம் தேதி ரிஷப வாகனத்திலும் வீதியுலா காட்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, 8ம் தேதி இரவு, 8 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. வரும், 9ம் தேதி காலை, 11 மணிக்கு திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி இரவு, 7 மணிக்கு குதிரை வாகனத்தில் ஸ்வாமி வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி மாலை தேரோட்டம், 12ம் தேதி மதியம், 12 மணிக்கு தீர்த்தம் கொடுத்தல், 12:30 மணிக்கு யாகசாலை பூஜை, கடம் அபிஷேகம், இரவு, 7 மணிக்கு மயில்வாகனத்தில் வீதியுலா காட்சியும், தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி காலை, 10:30 மணிக்கு அபிஷேகமும், இரவு, 7 மணிக்கு ஊஞ்சல் ஏகாந்த ஷேவையும் நடக்கிறது. ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் நித்யா, தக்கார் ராஜகோபால் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.