சுவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனானி சதுர்தச என்கிறது சாஸ்திரம். அதாவது ஈரேழு பதினான்கு உலகங்களும் பசுவின் உடலில் இருப்பதாக ஐதீகம். பாவம், தோஷம் இவைகளுக்குப் பரிகாரமாக தங்கம், வெள்ளி, பூமிதானம் செய்கிறோம். இவைகள் எல்லாமே பசுவின் உடலில் அடக்கம். மொத்த உலகங்களின் பிரதிநிதியான பசுவைத் தானம் செய்து விட்டால் எல்லா தானமும் அளித்த பலன் கிடைக்கும். பசுவின் உடலில்உள்ள ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு பாவத்தைப் போக்க வல்லது என்றும் சொல்வார்கள். பசுவதையைத் தடுப்பதும், கோதானம் செய்த புண்ணியத்தை அளிக்கும்.