பதிவு செய்த நாள்
29
அக்
2013
10:10
துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் எஸ்.ஆர்.எம்., பப்ளிக் (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில் ஸ்வாமி விவேகானந்தர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி, ஸ்வாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழாவையொட்டி நடத்தப்பட்டது. விவேகானந்தரின் வீர உரைகளின் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் அவர்களின் நற்சிந்தனைகளை அவர்களது மனங்களில் வேரூன்றும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு கல்விக் குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி, இயக்குனர் பிரேமலதா தலைமை வகித்தனர். பள்ளியின் மூத்த முதல்வர் ஹரி, முதல்வர் பார்வதி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாணவர்கள் ஸ்வாமி விவேகானந்தர் வேடமணிந்து வந்தனர். பள்ளியின் சிறப்பு விருந்தினராக சௌடாம்பிகா பள்ளி முதல்வர் ராமசாமி பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி ஆங்கில துறை தலைவர் விக்டர் பிரேம்குமார், தமிழ் ஆசிரியர் செந்தில்ராஜா ஸ்வாமி விவேகானந்தரின் அறிவுரைகளை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர். மாணவ, மாணவிகள் ஸ்வாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை வீர முழக்கமிட்டனர்.