அவலூர்பேட்டை: சஞ்சீவிராயன் பேட்டையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைத்திட நெடுஞ்சாலை துறையினர் முன் வர வேண்டும். மேல்மலையனூர் ஒன்றியம் பெரியநொளம்பை ஊராட்சிக்குட்பட்ட சஞ்சீவிராயன் பேட்டையில் சேத்பட் செல்லும் மெயின் ரோடு அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவிலின் எதிரே பெரிய அளவில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சேத்பட், ஆரணி, வேலூர், திருவண்ணாலை, பெங்களூரூ உள்ளிட்ட வெளியூர்களுக்கு இந்த வழியாக வாகனங்களில் செல்லும் பல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கோவிலுக்கு செல்வதும், சாலையை கடந்து எதிரில் உள்ளே ஆஞ்சநேயரை வணங்குகின்றனர். இந்த நேரத்தில் மெயின் ரோடில் வேகமாக செல்லும் வாகனங்களினால் சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் பொருட்டு, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும்.