கடையநல்லூர் கரடிமாடசுவாமி கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2013 11:10
கடையநல்லூர்: கடையநல்லூர் கரடிமாடசுவாமி கோயில் ஐப்பசி கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மகாவிஷ்ணுவின் 9வது அவதாரங்களில் மூன்றாம் அவதாரமான வராக அவதாரத்துடன் கடையநல்லூரில் பக்தர்களுக்கு கரடி மாடசுவாமியாக லெஷ்மிவராக மூர்த்தி அருள்பாலித்து வருகிறார். தென் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஐப்பசி மாத கொடை விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 22ம் தேதி மாலை காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் கொடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து 23ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சணை அலங்காரம், 24ம் தேதி காய்கறி அலங்காரம், 25ம் தேதி அன்னாபிஷேகம் மற்றும் கரடிமாடசுவாமி சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடந்தது. 26ம் தேதி லட்டு அலங்காரம், 27ம் தேதி பழ அலங்காரம், 28ம் தேதி மாலை 3 மணிக்கு பால்குட ஊர்வலம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை அதனையடுத்து புஷ்பாஞ்சலி ஆகியன நடந்தது. கொடை விழாவின் சிறப்பு பெற்ற தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று மாலை 5 மணிக்கு துவங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து 12 மணிக்கு சாம பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று (30ம் தேதி) காலை 8 மணிக்கு பொங்கல்பானை அழைப்பு மற்றும் சிறப்பு பூஜைகளும், மதியம் 2 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கரடிசித்தர் வழிபாட்டுக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.