மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஞானபீடம் அமர்ந்த 43ம் ஆண்டு தொடக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமா ச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் ஞானபீடம் அமர்ந்த 43ம் ஆண் டு தொடக்க நாள் விழா ஆதீனத்தில் நடந்தது. விழாவையொட்டி ஞானபுரீஸ்வரர்கோயிலில் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமங்கள் நடைபெற்றது. தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் மதியம் ஞானபுரீஸ்வரர்கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஹோ மங்கள் பூர்ணாஹூதியாகி ஞானபுரீஸ்வரருக்கு உத்ராபிஷேகம் நடந்தது. இதையடுத்து ஆயுஷ்ய ஹோமம் பூர்ணாஹூதியாகி கடம் புறப்பட்டு குரு மகா சன்னிதானத்திற்கு மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து குருமகா சன்னி தானம் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சிற ப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் ஆதீனத்தில் உள்ள ஞானபீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அ ருளாசி வழங்கினார். தருமை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து அருட்பிரசாதங்கள் குருமகா சன்னிதானத்திற்கு வழங்கப்பட்டது. விழாவில் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகதம்பிரான் சுவாமிகள், ஆதீனக் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, மற்றும் ஆதீன கல்வி நிறுவன முதல்வர்கள், தலைமை ஆசிரி யர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.