பதிவு செய்த நாள்
01
நவ
2013
10:11
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க, 15.71 கோடி ரூபாய்க்கு, அரசு அனுமதி வழங்கி உள்ளது. டிசம்பரில் நடந்த, கலெக்டர் மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதா," தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும், சாலைகள் சீரமைக்கப்படும் என, அறிவித்தார். அதைத் தொடர்ந்து, திருச்செந்தூ ர் சுற்றுலா மாளிகைக்கு செல்லும் சாலையை சீரமைக்க, 4.10 கோடி; புறவழிச்சாலையை, நான்கு வழிப்பாதையாக மாற்ற, 2.20 கோடி; திருச்செந்தூர் செங்கோட்டை சாலையை சீரமைக்க, 1.62 கோடி; தூத்துக்குடிதிருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையை மேம்படுத்த, 9.16 கோடி ரூபாய் என, மொத்தம் 17.08 கோடி ரூபாய்க்கு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பினர். இதை பரிசீலித்த அரசு, 15.71 கோடி ரூபாய்க்கு, அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பித்துள்ளது.