கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2013 10:11
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா இம்மாதம் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை மற்றும் மாலை நேரங்களில் அம்பாள் திருவீதியுலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.