பதிவு செய்த நாள்
04
நவ
2013
11:11
செஞ்சி: செஞ்சி தாலுகா அங்கராயநல்லூரில் உள்ள புராதானமான முத்து மாரியம்மன் கோவில் மற்றும் செல் வ விநாயகர், புரடியாத்தம்மன், சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 7ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு 6ம் தேதி மாலை 4 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பிரவேச பலி, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 7ம் தேதி காலை 4 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மகா கணபதி மூலமந்திரம், நவக் கிரக ஹோமமும், 7.30 மணிக்கு தம்பதி சங்கல்பம், நாடிசந்தானம், விசேஷ திரவிய ஹோமம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 8.30 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு முத்து மாரியம்மன் கோபுர விமானத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.