அரியப்பம்பாளையம்: செல்லாண்டியம்மன் நேற்று முன்தினம் தீபாவளியை முன்னிட்டு மாட்டு வண்டியில் வீதியுலா நடந்தது. சத்தியமங்கலம் அருகே உள்ளது அரியப்பம்பாளையம். இங்குள்ள செல்லாண்டியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு விசேஷ தினங்களில், செல்லாண்டியம்மன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வீதி, வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நேற்று முன்தினம் தீபாவளியை முன்னிட்டு, கோவிலில் இருந்து மாட்டு வண்டியில் துவங்கிய செல்லாண்டியம்மன் ஊர்வலம், பவானி ஆற்று வீதி, கோபி ரோடு, புளியம்பட்டிபிரிவு உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்த செல்லாண்டியம்மனை பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வணங்கினர்.