பதிவு செய்த நாள்
04
நவ
2013
11:11
ஈரோடு: ஈரோடு திண்டல் மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. ஈரோடு திண்டல்மலை வேலாயுதசாமி கோவிலில் ஐப்பசி மாதத்தில், கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். நேற்று, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், யாக பூஜைளுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு, விரதமிருக்கும் பக்தர்கள், காப்பு கட்டி தங்களது விரதத்தை துவக்கினர். இன்று காலை, 9 மணிக்கு ஷடாக்ஷர ஹோமம், யாக பூஜையும், நாளை காலை, 9 மணிக்கு ருத்ரபாராயணம், சங்காபிஷேகம், சத்ரு சம்ஹார யாகமும், 6ம் தேதி காலை, 9 மணிக்கு ஷண்முகார்ச்சனையும், 7ம் தேதி சுப்ரமணிய பிரசந்நமாலா மந்திர ஹோமம் நடக்கிறது. நவம்பர், 8ம் தேதி காலை, 9 மணிக்கு யாக பூஜை, பால் அபிஷேகமும், பால் குட கிரிவலமும், பகல், 12 மணிக்கு அன்னதானமும், மாலை, 6 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. நவம்பர், 9ம் தேதி காலை, 8.30 மணிக்கு கல்யாண உற்சவ பூஜைகள் துவங்குகிறது. அதன் பின் வள்ளி, தெய்வாணை சமேத வேலாயுதசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பகல், 12 மணிக்கு அன்னதானமும், மாலை, 5 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. உதவி ஆணையர் சபர்மதி உத்தரவுப்படி, செயல் அலுவலர் பசவராஜன் ஏற்பாடுகளை செய்துள்ளார்.