பதிவு செய்த நாள்
05
நவ
2013
10:11
பாரிமுனை: பாரிமுனையில் உள்ள, கந்தசாமி கோவிலில், கந்தசஷ்டி கோடி அர்ச்சனை பெருவிழா, வரும், 8ம் தேதி வரை நடக்கிறது. பாரிமுனையில் உள்ள, கந்தசாமி கோவிலில், இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி கோடி அர்ச்சனை பெருவிழா, கடந்த 2ம் தேதி துவங்கி, வரும், 8ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், மூலவர், உற்சவர், தண்டாயுதபாணி, ஆறுமுகர் ஆகிய, நான்கு சந்நிதிகளில், தொடர்ந்து அர்ச்சனைகள் நடக்கும். பெருவிழா நடக்கும் ஆறு நாட்களும், முத்துக்குமரன் கலை அரங்கில், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி பாடல்கள், நாட்டியம் முதலிய இசை நிகழ்ச்சி கள் தொடர்ந்து நடக்கும். சஷ்டி அன்று, சிறப்பு பூஜைகளும், கோடி அர்ச்சனையும் காலை முதல், மதியம் வரை நடக்கும். வரும் 9ம் தேதி, மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், முத்துக்குமாரசுவாமிக்கு, 108 பன்னீர் அபிஷேகமும் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர், லயன் முத்து மற்றும் அறங்காவலர்கள் செய்து உள்ளனர்.