பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்பிகை கோயில், ஐப்பசி மாத கவுரி நோன்பு திருவிழா, நவ.,3ம் தேதி, காப்பு கட்டுடன் துவங்கியது. கேதார கவுரீஸ்வரி நோன்பு உற்சவம் நடந்தது. அம்பாள், சிவபெருமானுக்கு பூஜை செய்து அருள்பாலித்தார். இன்று(நவ.5) அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா, ஊஞ்சல் உற்சவம், நவ.6ல் உற்சவ சாந்தி, இரவு புஷ்பபல்லக்கில் சயன கோலத்தில் அம்பாள் வீதியுலாவுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தெலுங்கு விஸ்வப்பிராமண மகாஜன சபை தலைவர் ரவீந்திரன் தலைமையில் செய்து வருகின்றனர்.