பதிவு செய்த நாள்
05
நவ
2013
11:11
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குருபூஜையில், நாளை தீர்த்தாபிஷேக விழா நடக்கிறது. ஐப்பசி மூல நட்சத்திரத்தில், மவுனகுருசுவாமி குருபூஜை விழா நடைபெறும். இதில் பங்கேற்க, பல்வேறு மாநிலங்களில் இருந்து சாதுக்கள் வருவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, நாளை துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் மாலையணிந்து விரதம் மேற்கொண்டுள்ளனர். சிவனூரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி மலை, சுருளி, காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சதுரகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து, பக்தர்கள் புனிதநீர் எடுத்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு தீர்த்தாபிஷேகம் நடக்கிறது. நவ., 7 ல், விநாயகர் வேள்வியுடன் துவங்கும் விழாவில், திருவாசக, திருமுறை பாராயணத்துடன், 108 படி பாலாபிஷேகத்துடன் குருபூஜை நடக்கிறது. உற்சவ மூர்த்திக்கு, தங்கக் கிரீடம் சாற்றுதலுடன் விசேஷ பூஜை நடக்கும். அன்னதானக் கொடி ஏற்றப்பட்டு, மகேஸ்வர பூஜை நடக்கிறது. காலை 6 தல் இரவு 10 மணிவரை, தொடர் அன்னதானம் நடைபெறும். சொற்பொழிவு, பஜனை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.