சங்கரன்கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி யாழி, சிற்பங்கள் சேதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2013 11:11
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்த போது சங்கரநாராயண சுவாமி கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதம் அடைந்தன.