பதிவு செய்த நாள்
07
நவ
2013
10:11
திருத்தணி : அம்மன் கோவில்களில், நாக சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பெண்கள் மூலவருக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.தீபாவளி முடிந்து ஐந்தாம் நாளில், திருத்தணி பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், நாக சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, திருத்தணி, அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவில், மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், கீழ் பஜார் தெருவில் உள்ள, அங்காள பரமேஸ்வரி கோவில், காந்தி நகரில் உள்ள துர்க்கையம்மன் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட, 30க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில், நேற்று, நாக சதுர்த்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, பெண்கள், கோவில்களில், மூலவர் அம்மனுக்கு இனிப்புகள் படைத்தும், சிறப்பு பூஜைகள் செய்தும், வழிபட்டனர். இதே போல், திருத்தணி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களிலும், நாக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.