பதிவு செய்த நாள்
07
நவ
2013
10:11
காவாங்கொளத்துார் : காவாங்கொளத்துார் கிராமத்தில் உள்ள, சித்தி விநாயகர் கோவிலில், இன்று, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது காவாங்கொளத்துார் கிராமம். இங்குள்ள, சித்தி விநாயகர் கோவிலில், புதியதாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை அம்மன், பைரவர் மற்றும் நவகிரக சன்னிதிகள் அமைக்கும் பணி நிறைவடைந்து, இன்று, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹூதியும் நடைபெறும். காலை, 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அதன் பின், இரவு, 8:00 மணிக்கு, சித்தி விநாயகர் திருவீதி உலாவும் நடைபெறும்.முன்னதாக, நேற்று காலை, 9:00 மணிக்கு கிராம தேவதைகள் வழிபாடும், புதிய சிலைகளுக்கு கரிக்கோலமும், மகா கணபதி ஹோமமும், புதிய சிலைகள் கண் திறத்தல் பிரதிஷ்டையும் நடந்தது. மாலை, 9:00 மணிக்கு, பூர்வாங்க நிகழ்ச்சியும், முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.