ராசிபுரம்: மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ராசிபுரத்தில், பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 1 மணி முதல், காலை, 6 மணி வரை, மஞ்சள் உடையணிந்த பக்தர்கள் அக்னிக் குண்டத்தில், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர், மாலையில், உற்சவர் மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் வீதியுலா வர தயாராக இருந்தது. தமிழக சபாநாயகர் தனபால், ராசிபுரம் நகராட்சி சேர்மன் பாலசுப்ரமணியம், நாமகிரிப்பேட்டை யூனியன் சேர்மன் பொன்னுசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.