பதிவு செய்த நாள்
08
நவ
2013
11:11
தர்மபுரி: தர்மபுரி அடுத்த தொப்பூர் கணவாய் மன்றோ குளக்கரை ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில், வரும், 14ம் தேதி மஹா சம்ப்ரோஷன விழா நடக்கிறது. இதையொட்டி, வரும், 13ம் தேதி காலை 6 மணிக்கு தீர்த்தம் அழைத்தல், பகவத் பிராத்னை, ஆச்சார்ய அழைப்பு, மஹா சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. காலை, 9 மணிக்கு மேல் ஆச்சார்ய வர்ணம், யஜமான சங்கல்பம், பகவத் பிராத்தனை, புண்ணியாகவாஜனம், ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, கும்பபூஜை, மூர்த்தி ஹோமம், சயனாதிவாசம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பூ பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. வரும், 14ம் தேதி காலை, 9 மணிக்கு ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி கோபுர கலசம் மற்றும் உற்சவாதி மூர்த்திகளுக்கு மஹா சம்ரோஷனம், ப்ரம்மகோஷம், பூர்ணாஹுதி, ஆசிர்வாதம், தீர்த்த துளசி பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடகளை கோவில் தர்மகர்த்தா ராஜமாணிக்கம், சர்க்கரை கவுண்டர், கோவிந்தராஜ், அருணகிரி குப்புசாமி மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.