Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புகழ் பகுதி-7 திருப்புகழ் பகுதி-7
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மார்
2011
11:03

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி

விநாயகர் துதி

1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

2. உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கலிற் றேனமுதத் துணர்வூறி;
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயோ;
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தை-வலத் தாலருள்-கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.

3. பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பக்ஷியெனு முக்ரதுர கமுநீபப்-
பக்குவம லர்த்தொடையு மக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்;
திக்கதும திக்கவரு குக்குடமும் ரøக்ஷதரு
சிற்றடிய முற்றியப னிருதோளும்-
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமோடு
செப்பென எனக்கருள்கை மறவேனே;
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண்-
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்;
மிக்க அடி சிற்கடலை பக்ஷணமே னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனு மருளாழி-
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.

4. விடமடைசு வேலை யமார்படைசூலம்
விசையன்விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின் விளைவேது மறியாதே
கடியுலவு பாயல் பகலிர வெனாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீன னிவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன் மகள் வாய்மை யறியாதே
இதயமிக வாடியுடை பிளைநாத
கணபதியெ னாம முறைகூற
அடையலவ ராவி வெருவ அடிகூர
அசலுமறியாமலவரோ
அகல்வதென டாசொ லெனவுமுடி சாட
அறிவருளும் ஆனை முகவானே.

5. நினது திருவடி சத்திமயிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொடுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன்-
நெடிய வளைமுறி யிக்கொடு லட்டுகம்
நிறவி லரிசிப ருப்பவ லெட்பொரி
நிகரி லினிகத் லிக்கனி வர்கமு மிளநீரும்;
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக வொற்றைம ருப்பனை வலமாக-
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே;
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளு முறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை-
செரும வுதரநி ரப்புசெ ருக்குட
னிரைய வரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தள டக்கைகள் செகசேசே;
எனவே துகுதுகு துத்தென வொத்துகள்
துடிக ளிடமிக வொத்துமு ழக்கிட
டிமுட டிமு டிமு டிட்டிமெ னத்தவி லெழுமோசை-
இகலி யலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுநடித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமாளே.

6. முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்-
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப்;
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப்-
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது மொருநாளே;
தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கநடிக்கக் கழுகொடு கழுதாடக்-
திக்குப்பரி யட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்;
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை-
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே.

முதலாவது படைவீடு - திருப்பரங்குன்றம்

7. உனைத்தி னந்தொழு திலனுவ தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடு னடியிணை
உறப்ப ணிந்தில னொருதவ மிலனுன தருள்மாறா-
உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன்
விருப்போ டுன்சிக ரமும் வலம் வருகிலன்
உவப்பொடுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோல;

கனைத்தே ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலித னுழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதை கொடுபொருபோதே-
கலக்கு றுஞ்செய லொழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தி லென்பய மறமயில் முதுகினில் வருவாயே;

வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமே யுகுதசை கழுகண
விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் புரிவேலா-
மிகுத்த பண்பயில் குயில் மொழி யழகிய
கொடிச்சி கும்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை யுடையோனே;

தினத்தினஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தவை செயுமுநி வரர் தொழ மகிழ்வோனே-
தெனத்தே னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

8. கறுக்கு மஞ்சன விழியினை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்கு ளின்சுவை யமுதுகு மொருசிறு நகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ  ழுந்திரு மெனமன முருகவொர்
கவற்சி கொண்டிடமனைதனி லழகொடு கொடுபோகி

நறைத்த பஞ்சனை மிசையினின் மனமுற
அணைத் தகந்தனி லிணைமுலை யெதிர்பொர மிடறூடே
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற அருள்வாயே

நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
வுரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிரைத்த அண்டமு கடுகிடு கிடுவென வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரவிரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர அடுதீரா

திறற்க ருங்குழ லுமையவ ளருளுறு
புழைக்கை தன்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரு மிளையோனே
சினத்தொ டுஞ்சம னுரைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே

9. வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கியைங்கணை மதனனையொருஅரு  மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரு மெனவுரை
வழுத்தி யங்கவ ரொடுசரு வியுமுடல் தொடுபோதே

விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினின்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு  தொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனி லருள்பெறநினைகுவ  துளதோதான்

குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவட மணிசிறு
குறக்கரும்பின் மெய்துவள்புயöனைவரு வடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை யெனமுனம்
அடைத்தி லங்கையி னதிபதி நிசிசரர்
குலத்தொடும்பட வொருகணை விடுமரி மருகோனே

திடத்தெ திர்ந்திடு மசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே.

10. கனகந்திரன் கின்ற -பெருஙகிரி
தனில்வந்துத கன்தக னென்றிடு
கதிர்மிஞ்சிய செண்டை யெறிந்திடு கதியோனே-
கடமிஞ்சி யநந்தவி தம்புணர்
கவளந்தனை யுண்டு வளர்ந்திடு
கரியின்றுணை யென்று பிறந்திடு முருகோனே;

பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்பு கடைந்த பரம்பரர்
படரும்புய லென்றவ ரன்புகொள் மருகோனே-
பலதுன்ப முழன்று- கலங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்று கழிந்துட வந்தருள் புரிவாயே;

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட வின்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் புதல்வோனே-
அடல்வந்துமு ழங்கி யிடும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்ட நெரிந்திட வருசூரர்;

மனமுந்தழல் சென்றிட வன்றவ
ருடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில் வென்றனில் வந்தருளுங்கன பெரியோனே-
மதியுங்கதி ருந்தடி வும்படி
யுயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளமொன்று பரங்கிரி வந்தருள் பெருமாளே.

11. சருவும்படி வந்தன னிங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின்  வசமாகி
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலு மொன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழந்திட  திறமாவே

இரவும்பக லந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன வென்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும் அயர்வாகி
இவணெஞ்சுப தன்பத னென்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம்  அடைவேனோ

திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயி ருண்டவ னெண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள் வென்றடல்
ஜெயதுங்கமு குந்தன் மகிழ்ந்தருள் மருகோனே

மருவுங்கடல் துந்துமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள்  முருகோனே
மதியும்கதி ரும்புய லும்தின
மறுகும்படி அண்டமி லங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் பெருமாளே.

12. அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபி னரைதனி லுடைதனை
அவிழ்த்து மங்குள அரசிலை தடவியு மிருதோளுற்
றணைத்து மங்கையி னடிதொறு நகமெழ
வுதட்டை மென்றுப விடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென மிகவாய்விட்

டுருக்கு மங்கியின் மெழுகென வுருகிய
சிரத்தை மிஞ்சிடு மநுபவ முறுபல
முறக்கை யின்கனி நிகரென இலகிய முலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெ யுருகிட வமுதுகு
பெருத்த வுந்தியின் முழுகிமெ யுணர்வற
வுழைத்தி டுங்கன கலவியைமகிழ்வது தவிர்வேனோ

இருக்கு மந்திர மெழுவகை முநிபெற
வுரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் அலகிய அறுமுக எழில்வேளென்
றிலக்க ணங்களு மியலிசை களுமிக
விரிக்கு மம்பல மதுரித கவிதனை
யியற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே

செருக்கும் அம்பல மிசைதனி லசைவுற
நடித்த சங்கரர் வழிவழி யடியவர்
திருக்கு ருந்தடி யருள்பெற அருளிய குருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

13. கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில் வந்து தித்துக் குழந்தை  வடிவாகி
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து  நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
யவையணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி
அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்த மென்று  பெறுவேனோ

இரவி யிந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரச ரென்றும் ஒப்பற்ற வுந்தி
யிறைவ னெண்கி னக்கர்த்தனென்றும்  நெடுநீலன்
எரிய தென்றும் ருத்ரற்சி றந்த
அநும னென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரு மிந்த வர்க்கத்தில் வந்து புனமேவ

அரிய தன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனை யும்பு டைத்துச்சி னந்து
உலக மும்ப டைத்துப்ப ரிந்து
அருள்ப ரங்கி ரிக்குட்சி றந்த பெருமாளே.

14. காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு  தொருகோடி
காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
யாழியு டன்கட கந்துலங் கும்படி
காமனெடுஞ்சிலை கொண்டடர்ந்தும் பொருமயலாலே

வாதுபு ரிந்துவர் செங்கைதந் திங்கித
மாகந டந்தவர் பின்திரிந்த துந்தன
மார்பில ழுந்தவ ணைந்திடுந் துன்பம  துழலாதே
வாசமி குந்தகடம்பமென் கிண்கிணி
மாலைக ரங்கொளு மன்பர்வந் தன்பொடு
வாழநி தம்புனை யும்பதந் தந்துன  தருள்தாராய்

போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர
மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
போதவளஞ்சிவசங்கரன் கொண்டிட  மொழிவோனே
பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
ரீவம டந்தையு ரந்தரன் தந்தருள்
பூவைக ருங்குற மின்கலந் தங்குப  னிருதோளா

தீதகீ மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
சேர்நிரு தன்குல மஞ்சமுன் சென்றடு திறலோனே
சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை  பெருமாளே.

15. சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித்  திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண்டன்புற்  றிடுவோனோ

தந்தியின் கொம்பைப் புணர்வோனே 
சங்கரன் பங்கிற்  சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற்  பெருமாளே.

16. தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென்  றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படும்
தளர்ச்சிப் பம்பரந்  தனையூசற்

கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடும்
கலத்தைப் பஞ்சஇந்  த்ரியவாழ்வைக்
கணத்தில் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண்  டருள்வாயே

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன்  பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந்  தனிவேலா

குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்குமங்
குலத்திற் கங்கைதன்  சிறியோனே
குறப்பொற் கொம்மைமுன் புனத்திற் செங்கரம்
குவித்துக் கும்பிடும்  பெருமாளே.

17. பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
பருத்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்
பருப்பதந் தந்தச் செப்பவை யொக்குந்  தனபாரம்
படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
செருக்குவண் டம்பப் பிற்கய லொக்கும்
பருத்தகண் கொண்டைக் கொக்கு மிருட்டென் றிளைஞோர்கள்

துதித்தமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்
புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றும்
துகிற்களைந் தின்பத் துர்க்கம ளிக்குங்
துலக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென்  றருள்வாயே

குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்
கடற்கரந் தஞ்சிப் புக்கவ ரக்கன்
குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்கும்  கதிர்வேலா
குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்கும்
குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங்  குகுகூகூ

திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்
பதிர்ந்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்
திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங்  கொலைவேடர்
தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்
திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும்  பெருமாளே.

18. பொப்புறும் கொங்கையார் பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடும் சண்டிகள்  வஞ்சமாதர்
புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண் செந்துவர்  தந்துபோகம்

அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையி  லன்புமேவும்
அவர்க்குழன் றங்கமு மறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம்  அன்புறாதோ

மிருத்தணும் பங்கய னலர்க்கணன் சங்கரர்
விதித்தெணுங் கும்பிடு
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ்  அங்கவாயா

பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
திறற்செழுஞ் சந்தகில்  துன்றிநீடு
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங் குன்றுறை  தம்பிரானே.

19. மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர்  குழல்மாதர்
மண்டிடும் தொண்டையமு துண்டுகொண் டன்புமிகு
வம்பிடுங் கும்பகன  தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென் கின்றமடு  விழுவேனை
உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும்  அடிசேராய்

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென் பங்கமணி  பவர்சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன் தம்பியெனும்  வயலூரா

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர்  செறிசோலை
திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை  பெருமாளே.

20. வரைத்தடங் கொங்கை யாலும்
வளைப்படும் செங்கை யாலும்
மதர்த்திடும் கெண்டை யாலு  மனைவோரும்
வடுப்படும் தொண்டை யாலும்
விரைத்திடும் கொண்டை யாலும்
மருட்டிடும் சிந்தை மாதர்  வசமாகி

எரிப்படும் பஞ்சு போல
மிகக்கெடுந் தொண்ட னேனும்
இனற்படுந் தொந்த வாரி கரையேற
இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ரீக  மருள்வாயே

சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்
இளக்ரவுஞ் சந்த னோடு
துளக்கெழுந் தண்ட கோள  மளவாகத்
துரத்தியன் றிந்த்ர லோக
மழித்தவன் பொன்று மாறு
சுடப்பருஞ் சண்ட வேலை  விடுவோனே

செருக்கெழுந் தும்பர் சேனை
துளக்கவென் றண்ட மூடு
தெழித்திடுஞ் சங்க பாணி  மருகோனே
தினைப்புனம் சென்று லாவு
குறத்தியின் பம்ப ராவு
திருப்பரங் குன்ற மேவு  பெருமாளே.

இரண்டாம் படைவீடு - திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)

21. அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண்  டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்

திந்திரிய சஞ்சலங் கலையறுத்
தம்புயப தங்களின் பெருமையைக் கவிபாடிச்
செந்திலையு ணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனைய றிந்தறிந்  தறிவினில்

சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையும விழ்ந்தவிழ்ந்  துரையொழித்
தென்செய லழிந்தவிழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்று நின் தெரிசனைப் படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன்  பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின்  திருவரைக்

கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குணடல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்

தண்டைகள் கவின்கலின் கலிöனைத் திருவான
சங்கரி மணங்குழைந்  துருகமுதி
தந்தர வருஞ்செழும் தளர்நடைச்
சந்ததி சுகம்தொழும் சரவணப் பெருமாளே.

22. அருணமணி மேவ ம்ருகமத படீர லேபன
அபிநவ விசால பூரண 
அச்பொற் கும்பத்  தனமோதி
அளிகுலவு மாதர் விலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய
அங்கைக் கொங்கைக்  கிதமாகி

இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
லிழைகளைய மாத ரார்வழி
யின்புற் றன்புற்  றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொல்  தருவாயே

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி னாதி யாகிய
சங்கத் துங்கக்  குழையாளர்
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு
துண்டிட் டண்டர்க் கருள்கூடும்

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித்  தருள்மாயன்
திருமுருக சூரன் மார்பொரு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர
செந்திற் கந்தப் பெருமாளே.

23. அறிவழிய மயல்பெருக வுரையமற விழிசுழல
அனலவிய மலமொழுக அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறவியெனை  யழையாதே

செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ்  பகர்வோனே

நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய வனமாலி
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை  விடுவோனே

மறிபரசு கரமிலகு  பரமனுமை யிருவிழியு
மகிழமவி மிசைவளரு   மிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை  பெருமாளே.

24. அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅடி பின்தொ டர்ந்து  பிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்பலம்பு
மவலவுட லஞ்சு மந்து  தடுமாறி

மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
மனவழி திரிந்து மங்கும்  வசைதீர
மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கைகொஞ்ச
மலரடி வணங்க என்று  பெறுவேனோ

தினைமிசை சுகங்க டிந்த புன்மயி விளங்கு ரும்பை
திகழிரு தனம்பு ணர்ந்த திருமார்பா
ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரிவலம் வந்த செம்பொன்

இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
இறைவகுக கந்த என்று  மிளையோனே
எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்ச
மிமையவரை யஞ்ச லென்ற

25. இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத்  தருவாயே

மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப்  பெருமாளே.

26. இருகுழையெறிந்தகெண்டைகள் ஒருகுமிழடர்ந்துவந்திட
இணைசிலைநெ ரிந்தே ழுந்திட  அணைமீதே
இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திட
இதழமுத ருந்து  சிங்கியின் மனமாய

முருகொடுக லந்த சந்தண அளறுபடு குங்கு மங்கமழ்
முலைமுகடு கொண்டே ழுந்தொறு  முருகார
முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு
முகமுடியுந லம்பி றந்திட  அருள்வாயே

எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையும்
இதழியொட ணிந்த சங்கரர்  களிகூரும்
இமவரைத ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி
யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி பெருவாழ்வே

அரைவடம லம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைகள்
அணிமணிச தங்கை கொஞ்சிட  மயில்மேலே
அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம்
அலைபொருத செந்தில் தங்கிய  பெருமாளே.

27. இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு
மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு
மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு  மைந்தரோடே
இலைபிள வதனை நடித்துக் கேட்கவு
மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு
மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவும் எங்கள்வீடே

வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்
விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்
வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு  நிந்தையாலே
வனைமனை புகுதி லடித்துப் போக்கவு
மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
வசைவிட நினது பதத்தைப் போற்றுவ தெந்தநாளோ

குருமணி வயிர மிழித்துக் கோட்டிய
கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய
குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய  மண்டுநீரூர்
குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி
குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை வண்டலாடா

முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை
விளைநடு விதணி லிருப்பைக்  காட்டிய
முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு  செந்தில்வாழ்வே
முளையிள மதியை யெடுத்துச் சாத்திய
சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர
முறையருள் முருக தவத்தைக் காப்பவர் தம்பிரானே.

28. உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்ற லோதிநரை  பஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேல்விழி
மிடைகடையொ துங்கு பிளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய்

மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர்  கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களி
னிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமது  சிந்தியேனோ

இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி  நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனு
முமைமருவு சந்த்ர சேகரனு
மிமையவர்வ ணங்கு வாசவனு நின்றுதாழும்

முதல்வசுக மைந்த பீடிகையி
லகிலசக அண்ட நாயகிதன்
முகிழ்முலைசு ரந்த பாலமுத  முண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு  தம்பிரானே

29. ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை  நெறிபேணா
ஈனனை வீணனை யேடெழு தாமுழு
ஏழையை மோழையை  அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை  யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது  மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல்  குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி  லுடையோனே

தேவிம னோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு  சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு பெருமாளே.

30.ஓள தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட்  டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட்  டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட்  குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக்  கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சக்
சூர்மா அஞ்சப்  பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற்  பெருமாளே.

31. கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுன
மிட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட  தின்சிலர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் முறையோடே
வெட்டவிட வெட்டக் கிடஞ்சம் கிடஞ்சமென

மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற
பட்டுருவி நெட்டைக் க்ரௌஞ்சம் பிளந்துகடல்
முற்றுமலை வற்றிக் குழம்பும்  குழம்பமுனை

பட்டஅயில்தொட்டுத்திடங்கொண்டெதிர்ந்தவுணர் முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம்  பெருங்கழுகு
நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை  பெருமாளே.

32. கண்டுமொழிகொம்பு கொங்கை வஞ்சியிடை  அம்புநஞ்சு
கண்கள்குழல் கொண்ட லென்று  பலகாலும்
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பக லென்று நின்று  விதியாலே

பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து  புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன்க லந்து
பண்புபெற அஞ்ச அஞ்ச  லெனவாராய்

வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டறநெருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின்  மிகமூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த  மணிமார்பா

திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க  மயில்மீதே
சென்றசுர ரஞ்ச வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த  பெருமாளே.

33. களப மொழுகிய புளகித முலையினர்
கடுவு மமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரிபுழு கொழுகிய குழலின  ரெவரோடும்
கலக மிடுகய லெறிகுழை விரகியர்
பொருளி லிளைஞரை வழிகொடு மொழிகொடு
தளர விடுபவர் தெருவினி லெவரையு  நகையாடிப்

பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள்பெறி லமளியி லிதமொடு  குழைவோடே
பிணமு மணைபவர் வெறிதரு புனலுணும்
அவச வனிதையர் முடுகொடு மணைபவர்
பெருமை யுடையவ ருறவினை விடஅருள்  புரிவாயே

அளைவி லுறைபுலி பெறுமக வயில்தரு
பசுவி னிரைமுலை யமுதுண நிரைமகள்
வசவ னொடுபுலி முலையுண மலையுட  னுருகாநீள்
அடவி தனிலுள வுலவைகள் தளிர்விட
மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர  விரல்சேரேழ்

தொளைகள் விடுகழை விரன்முறை தடவிய
இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
சுருதி யுடையவ னெடியவன் மனமகிழ்  மருகோனே
துணைவ குணதர சரவண பவநம
முருக குருபர வளரறு முககுக
துறையில் அலையெறி திருநக ருறைதரு  பெருமாளே.

34. கனங்கள் கொண்டகுந்தளங்க ளுங்கு லைந்தலைந்துவிஞ்சு
கண்க ளுஞ்சி வந்த யர்ந்து  களிகூரக்
கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க
றங்கு பெண்க ளும்பி றந்து  விலைகூறிப்

பொனின்குடங்களஞ்சுமென்தனங்களும்புயங்களும்பொ
ருந்தி யன்பு நண்பு பண்பு  முடனாகப்
புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்குழைந்தவம்பு
ரிந்து சந்த தந்தி ரிந்து  படுவேனோ

அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி
றந்தி ருண்ட கண்டர் தந்த  அயில்வேலா
அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு
ரிந்த அன்ப ரின்ப நண்ப  உரவோனே

சினங்கள் கொண்டி லங்கை மன்சிரங்கள் சிந்த வெஞ்ச ரந்தெ
ரிந்த வன்ப ரிந்த இன்ப  மருகோனே
சிவந்தசெஞ்ச தங்கையுஞ்சி லம்புதண்டையும்புனைந்து
செந்தில் வந்த கந்த எங்கள்  பெருமாளே.

35. கன்றிலுறு மானை வென்றவிழி யாலெ
கஞ்சமுகை மேவு  முலையாலே
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை
கந்தமலர் சூடு மதனாலே

நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
நம்பவிடு மாத  ருடனாடி
நஞ்சுபுரி தேரை யங்கமது வாக
நைந்துவிடு வேனை  யருள்பாராய்

குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
கொண்டபடம் வீசு  மணிகூர்வாய்
கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனை
கொன்றகும ரேசு  குருநாதா

மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
வண்டுபடு வாவி  புடைசூழ
மந்திநட மாடு செந்தினகர் மேவு
மைந்தஅம ரேசர்  பெருமாளே.

36. குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட் டுந்தித்  தடமூழ்கிக்
குமுத வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற் கொண்டைக்  குழலாரோ

டகரு தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற் றின்பக்  கடலூடே
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற் றண்டைக்  கழல்தாராய்

ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப்  புனலாடும்
கமல வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப்  புகல்வோனே

சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
செம்பொற் கம்பத்  தளமீதும்
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற் கந்தப்  பெருமாளே.

37. குடர்நிண மென்பு சலமல மண்டு
குருதிந ரம்பு  சீயூன் பொதிதோல்
குலவு குரம்பை முருடு சுமந்து
குனகிம கிழ்ந்து  நாயேன் தளரா

அடர்மத னம்பை யனையக ருங்க
ணரிவையர் தங்கள்  தோடோய்ந் தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன்
அடியிணை தந்து  நீயாண் டருள்வாய்

தடவியல் செந்தி லிறையவ நண்பு
தருகுற மங்கை  வாழ்வாம் புயனே
சரவண கந்த முருகக டம்ப
தனிமயில்  கொண்டு  பார்சூழ்ந் தவனே

சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
தொழவொரு செங்கை  வேல்வாங் கியவா
துரிதப தங்க இரதப்ர சண்ட
சொரிகடல் நின்ற  சூராந் தகனே.

38. கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
கொண்டளைய டைந்தகுழல்  வண்டுபாடக்
கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
கொஞ்சியதெ னுங்குரல்கள்  கெந்துபாயும்

வெங்கயல் மிரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்
விஞ்சையர்கள் தங்கள்மயல்  கொண்டுமேலாய்
வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
மின்சரண பைங்கழலொ  டண்டஆளாய்

சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை
தந்தனத னந்தவென  வந்தசூரர்
சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும் டிந்துவிழ
தண்கடல்கொ ளுந்தநகை  கொண்டவேலா

சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
தங்களின்ம கிழ்ந்துருகு  மெங்கள்கோவே
சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு
சம்புபுகழ் செந்தில்மகிழ்  தம்பிரானே.

39. கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள நகமேவு
குங்கும பாடீர பூஷண  நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார சோபையில்  மருளாதே

உம்பர்கள் ஸ்வாமி நமோநம எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம  எனநாளும்
உன்புக ழேபாடி நானினி அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள்  புரிவாயே

பம்பர மேபோல ஆடிய சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி  கரசூலி
பங்கமி லாநீலி மோடிப யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ  டெதிர்போர்கண்

டெம்புதல் வாவாழி வாழியெ னும்படி வீறான வேல்தர
என்றுமு ளானேம னோகர  வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யிடேற வாழ்வருள்  பெருமாளே.

40. கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத்  தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற்  றிடுநாயேன்

நிலைய்ழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற்  றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற்  றடைவேனோ

சிலையென வடமலை யுடையவ ரருளிய
செஞ்சொற்  சிறுபாலா
திரைகட லிடைகரு மசுரனை வதைசெய்த
செந்திற்  பதிவேலா

விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப்  புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப்  பெருமாளே.

41. சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும  நந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிக  அன்புறாதே

காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி கின்றமாயா
காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும  தென்கொலோதான்

நேமிச் சூரொடு மேருத் தூளெழ
நீளக் காளபு  யங்ககால
நீலக் ரீபக லாபத் தேர்விடு
நீபச் சேவக  செந்தில்வாழ்வே

ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
லோகத் தேதரு  மங்கைபாலா
யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள்  தம்பிரானே.

42. தகரநறை பூண்ட விந்தைக்
குழலியர்கள் தேய்ந்த இன்பத்
தளருமிடை யேந்து தங்கத்  தனமானார்
தமைமனதில் வாஞ்சை பொங்கக்
கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
சமயஜெப நீங்கி யிந்தப்  படிநாளும்

புகலரிய தாந்த்ரி சங்கத்
தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்
புவியதனில் வாழ்ந்து வஞ்சித்  துழல்மூடர்
புனிநிதமிலி மாந்தர் தங்கட்
புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்
புளகமலர் பூண்டு வந்தித்  திடுவேனோ

தகுடதகு தாந்த தந்தத்
திகுடதிகு தீந்த மிந்தித்
தகுகணக தாங்க ணங்கத்  தனதான
தனனதன தாந்த னந்தத்
தெனநடன மார்ந்த துங்கத்
தனிமயிலை யூர்ந்த சந்தத்  திருமார்பா

திகையசுரர் மாண்ட ழுந்தத்
திறலயிலை வாங்கு செங்கைச்
சிமையவரை யீன்ற மங்கைக்  கொருபாலா
திகழ்வாயிர மேந்து கொங்கைக்
குறவனிதை காந்த சந்த்ரச்
சிகரமுகி லோங்கு செந்திற்  பெருமாளே.

43. தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட  வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி  ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி  பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட  மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலியய  மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு  மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி கைரிலுறை  பெருமாளே.


44. தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
தவிக்குங்கொடி  மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி  னுடனேநின்

றெரிக்கும்பிறை யெனப்புண்படு
மெனப்புன்கவி  சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
யுரைத்துய்ந்திட  அறியாரே

அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
மனுக்குந்தெரி  வரிதான
அடிச்யசஞ்சடை முடிகொண்டிடு
மரற்கும்புரி  தவபாரக்

கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
வரிக்குங்குரு  பரவாழ்வே
கிøளிககுந்திற லரக்கன்கிளை
கெடக்கன்றிய   பெருமானே.

45. துன்பங்கொண் டங்க மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி  லணுகாதே
இன்பந்தந் தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
யென்றென்றுந் தொண்டு செயும்படி  யருள்வாயே

நின்பங்கொன் றுங்குற மின்சர
ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடு  மிளையோனே
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்கு வலம்புரி
பம்புந்தென் செந்திலில் வந்தருள்  பெருமாளே.

46. தெருப்பு றத்துத் துவக்கியாய்
முலைக்கு வட்டைக் குலுக்கியாய்
சிரித்துருக்கித் தருக்கியே பண்டைகூள  மெனவாழ்
சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்
மனத்தை வைத்துக் கனத்தபேர்
தியக்க முற்றுந் தவிக்கவே கண்டுபேசி  யுடனே

இருப்ப கத்துத் தளத்துமேல்
விளக்கெ டுத்துப் படுத்துமே
லிருத்தி வைத்துப் பசப்பியே கொண்டுகாசு  தணியா
திதுக்க துக்குக் கடப்படா
மெனக்கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார் தங்கள்சேர்வை  தவிராய்

பொருப்பை யொக்கப் பணைத்ததோ
ரிரட்டி பத்துப் புயத்தினால்
பொறுத்த பத்துச் சிரத்தினால் மண்டுகோப  முடனே
பொரப்பொ ருப்பிற் கதித்தபோ
ரரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்தமா லன்புகூரு  மருகா

வரப்பை யெட்டிக் குதித்துமே
லிடத்தில் வட்டத் தளத்திலே
மதர்த்த முத்தைக் குவட்டியே நின்றுசேலி  னினம்வாழ்
வயற்பு றத்துப் புவிக்குள்நீள்
திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்
வயத்த நித்தத் துவத்தனே செந்தில்மேவு  குகனே.

47. தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்நகையாடித்-
தொண்டு கிழவ னிவனா ரென இருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி;

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமே யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக துயர்மேலி-
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்;

எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக அபிராம-
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல வருமாயன்;

சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய அடுதீரா-
திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்திநகரி லினிதே மருவிளர் பெருமாளே.

48. தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் புதிதான
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
கோவையு லாமடல் கூறிய ழுந்தித்
தோமுறுகாளையர் வாசல்தொ றும்புக்  கலமாருங்

காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
கோளனை மானமி லாவழி நெஞ்சக்
காதக லோபவ்ரு தாவனை நிந்தைப்  புலையேனைக்
காரண காரிய லோகப்ர பஞ்சச்
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
காசறு வாரிமெய்ஞ் ஞான தவஞ்சற்  றருளாதோ

பாலன மீதும னான்முக செம்பொற்
பாலனை மோதப ராதன பண்டப்
பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்  றமராடிப்
பாவியி ராவண னார்தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்  கினியோனே

சீலமு லாவிய நாரதர் வந்துற்
றீதவள் வாழ்புன மாமென முந்தித்
தேமொழி பாளித கோமள இன்பக்  கிரிதோய்வாய்
சேலொடு வாளைவ ரால்கள் கிளம்பித்
தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
சீரலை வாய்நகர் மேவிய கந்தப்  பெருமாளே.

49. நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாசி
நாரி யென்பி லாகு மாக  மதனூடே
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி டாம லேக  வளராமுன்

நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி  விளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து வாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு  தருவாயே

காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல  மெனுமாதி
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
காள  கண்ட ரோடு வேத  மொழிவோனே

ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன்  மருகோனே
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
யான செந்தில் வாழ்வ தான  பெருமாளே.

50. நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென்  றினைவோரை
நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ்  சினில்நாளும்

புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம்  பழிமாயும்
புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
புணர்க்கைக் கன்புதந்  தருள்வாயே

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் றந்தைமன்  றினிலாடி
மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
டமிழ்ச்சொற் சந்தமொன்  றருள்வோனே

குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனும்
கொழித்துக் கொண்டசெந்  திலின்வாழ்வே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும்  பெருமாளே.

51. நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது  மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள்  தடுமாறி

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய  நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலத்தாட் கமல  மருள்வாயே

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற  முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை  விடுவோனே

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித  வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய  பெருமாளே.

52. பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக
பங்க வாண்முக முடுகிய நெடுகிய  திரிசூலம்
பந்த பாசமு மருவிய கரதல
மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு
பண்பி லாதொரு பகடது முதுகினில்  யமராஜன்

அஞ்ச வேவரு மவதர மதிலொரு
தஞ்ச மாகியெ வழிவழி யருள்பெறும்
அன்பி னாலுன தடிபுக ழடிமையெ  னெதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண்டி சாமுக மடமட நடமிடும்
அந்த மோகர மயிலினி லியலுடன்  வரவேணும்

மஞ்சு போல்வள ரளகமு மிளகிய
ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென
வந்த தூயவெண் முறுவலு மிருகுழை  யளவோடும்
மன்றல் வாரிச நயனமு மழகிய
குன்ற வாணர்த மடமகள் தடமுலை
மந்த ராசல மிசைதுயி லழகிய  மணவாளா

செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
வஞ்ச கீழ்திசை சகலமு மிகல்செய்து
திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர்  மகமேரு
செண்டு மோதின ரரசரு ளதிபதி
தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு
செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள்  பெருமாளே.

53. படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி  சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல்  சந்தமாலை

மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு லாவு மால கந்தைத  விர்ந்திடாதோ

அடல்பொருது பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி  அன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்பரம
அதிபெல கடோர மாச லந்தர  னொந்துவீழ

உடல்தடியு மாழி தாவெ னம்புய
மலர்கள்தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடு  செங்கண்மாலுக்
குதவியம கேசர் பால இந்திரன்
மகளைமண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள்  தம்பிரானே.

54. பதும விருசரண் கும்பிட் டின்பக்
கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப்
பகடு புளகிதந் துன்றக் கன்றிக்  கயல்போலும்
பரிய கரியகண் செம்பொற் கம்பிக்
குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப்
பதற விதமுறுங் கந்துக் கொந்துக்  குழல்சாயப்

புதுமை நுதிநகம் பங்கத் தங்கத்
தினிது வரையவெண் சந்தத் திந்துப்
புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச்  சடைதாரி
பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக்
கறிவை யிழவிடும் பண்புத் துன்பப்
பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத்  தவிரேனோ

திதிதி ததததந் திந்தித் தந்தட்
டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்
தெனன தனதனந் தெந்தத் தந்தத்  தெனனானா
திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்
திரிரி தாரவென் றொன்றொப் பின்றித்
திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச்  சுவர்சோரச்

சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கல்
புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித்
தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட்  க்ருபைதாவென்
சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப்
பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச்
சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப்  பெருமாளே.

55. பரிமள களபசு கந்தச் சந்தத்  தனமானார்
படையம படையென அந்திக் குங்கட்  கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற்  குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற்  றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற்  றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற்  குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப்  பெருமாளே.

56. பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
யோதி மோகுலம் போலசம் போகமொடு
பாடி பாளிதங் காருகம் பாவையிடை  வஞ்சிபோலப்
பாகு பால்குடம் போலிரண் டானகுவ
டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்
பாவ மேகபொன் சாபமிங் தேபொருவ  ரந்தமீதே

மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி
தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை
வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை  யன்புளார்போல்
வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி
வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி
வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர்  சந்தமாமோ

தீத தோதகந் தீதநிந் தோதிதிமி
டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போலவொண் பேரிமுர  சங்கள்வீறச்
சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்
வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்
சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு  மங்கிவேலா

தாதை காதிலங் கோதுசிங் காரமுக
மாறும் வாகுவுங் கூரசந் தானசுக
தாரி மார்பலங் காரியென் பாவைவளி  யெங்கள்மாதைத்
தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக
ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு
தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை  தம்பிரானே.

57. பூரண வார கும்ப சீதப டீர கொங்கை
மாதர்விகார வஞ்ச லீலையி லேயு ழன்று
போதவ மேயி ழந்து போனது மான  மென்ப தறியாத
பூரிய னாகி நெஞ்சு காவல் பாடாத பஞ்ச
பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து
போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய  ழுந்து மயல்தீரக்

காரண காரி யங்க ளானெத லாமொ ழிந்து
யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து
காலுட லூடி யங்கி நாசியின் மீதி ரண்டு விழிபாயக்
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
கயாம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க அருள்வாயே

ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க
ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு
மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு  முரவோனே
ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற
சூரனை மாள வென்று வானுல காளு மண்ட
ரானவர் கூர ரந்தை தீரமுனாள்ம கிழ்ந்த  முருகேசா

வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு
வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த
மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன்  மருகோனே
வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து
சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து
வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த  பெருமாளே.

58. மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற  உடல்தீயின்
மண்டி யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய  விழ ஆவி

வெங்கண் மறவி தன்கை மருவ
வெம்பி யிடறு  மொருபாச
விஞ்சை விளையு மன்று னடிமை
வென்றி யடிகள்  தொழவாராய்

சிங்க முழுவை தங்கு மடவி
சென்று மறமி  னுடன்வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழு
செந்தி லுறையு  முருகோனே

எங்கு மிலகு திங்கள் கமல
மென்று புகலு  முகமாதர்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய  பெருமாளே.

59. மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு
வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல்
வண்டு புண்டரி கங்களை யும்பழி
மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை 
தங்க வெண்டர ளம்பதி யும்பலு
மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு  கண்டமாதர்

கஞ்சு கங்குர லுங்கழை யம்புய
கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி
கந்த சந்தன மும்பொலி யுந்துகில்  வஞ்சிசேரும்
கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு
கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை
கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை  நம்புவேனோ

சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு
டுண்டு டிண்டுமி டண்டம டுண்டுடு
தந்த னந்தன திந்திமி சங்குகள்  பொங்குதாரை
சம்பு வின்கும ரன்புல வன்பொரு
கந்த னென்றிடு துந்துமி யுந்துவ
சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை  விஞ்சவேகண்

டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ
டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட
அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக  வென்றவேளே
அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின்
மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன்
அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு  தம்பிரானே.

60. மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
வலிமைகுல நின்ற  நிலையூர்பேர்
வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
வரிசைதம ரென்று  வருமாயக்

கனவுநிலை யின்ப மதனையென தென்று
கருதிவிழி யின்ப  மடவார்தம்
கலவிமயல் கொண்டு  பலவுடல்பு ணர்ந்து
கருவில்விழு கின்ற  தியல்போதான்

நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
நெடுவரைபி ளந்த  கதிர்வேலா
நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்
நிலைபெறஇ ருந்த  முருகோனே

புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
புளகஇரு கொங்கை  புணர்மார்பா
பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
பொடிபடந டந்த  பெருமாளே.

61. மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்
மூடு சிலைதி றந்தம ழுங்கிகள்
வாசல் தோறுநடந்துசி ணுங்கிகள்  பழையோர்மேல்
வால நேசநி னைந்தழு வம்பிகள்
ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்
வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக  ளெவரேனும்

நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்
காசி லாதவர் தங்களை யன்பற
நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக  ளவர்தாய்மார்
நீலி நாடக மும்பையில் மண்டைகள்
பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்
நீச ரோடுமி ணங்குக டம்பிக  ளுறவாமோ

பாயு மாமத தந்திமு கம்பெறு
மாதி பாரத மென்ற பெருங்கதை
பார மேருவி லன்று வரைந்தவ  னிளையோனே
பாவை யாள்குற மங்கை செழுந்தன
பார மீதில ணைந்து முயங்கிய
பாக மாகிய சந்தன குங்கும  மணிமார்பா

சீய மாயுரு வங்கொடு வந்தசு
ரேசன் மார்பையி டந்து பசுங்குடர்
சேர வாரிய ணிந்த நெடும்புயல்  மருகோனே
தேனு லாவுக டம்ப மணிந்தகி
ரீட சேகர சங்கரர் தந்தருள்
தேவ நாயக செந்திலு கந்தருள்  பெருமாளே.

62. மான்போற்கண் பார்வை பெற்றிடு
மூஞ்சாற்பண் பாடு மக்களை
வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு  முலைமாதர்
வாங்காத்திண் டாடு சித்திர
நீங்காச்சங் கேத முக்கிய
வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு  மொழியாலே

ஏன்காற்பங் காக நற்புறு
பூங்காற்கொங் காரு மெத்தையில்
ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண  முதல்நீதா
ஈந்தாற்கன் றோர மிப்பென
ஆன்பாற்றென் போல செப்பிடும்
ஈண்டாச்சம் போக மட்டிக  ளுறவாமோ

கான்பாற்சந் தாடு பொற்கிரி
தூம்பாற்பைந் தோளி கட்கடை
காண்பாற்றுஞ் சாமல் நத்திடும்  அசுரேசன்
காம்பேய்ப்பந் தாட விக்ரம
வான்றோய்க்கெம் பீர விற்கணை
காண்டேர்க்கொண் டேவு மச்சுதன்  மருகோனே

தீம்பாற்கும் பாகு சர்க்கரை
காம்பாற்செந் தேற லொத்துரை
தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள்  புதல்வோனே
தீண்பார்க்குன் போத முற்றுற
மாண்டார்க்கொண் டோது முக்கிய
தேன்போற்செந் தூரில் மொய்த்தருள்  பெருமாளே.

63. முகிலாமெனு மளகம் காட்டி
மதிபோலுயர் நுதலும் காட்டி
முகிழாகிய நகையும் காட்டி  அமுதூறு
மொழியாகிய மதுரம் காட்டி
விழியாகிய கணையும் காட்டி
முகமாகிய கமலம் காட்டி  மலைபோலே

வகையாமிள முலையுங் காட்டி
யிடையாகிய கொடியுங் காட்டி
வளமானகை வளையுங் காட்டி  யிதமான
மணிசேர்டி தடமுங் காட்டி
மிகவேதொழி லதிகங் காட்டு
மடமாதர்கள் மயலின் சேற்றி  லுழல்வேனோ

நகையால்மத னுருவந் தீத்த
சிவனாரருள் சுதனென் றார்க்கு
நலனேயரு ளமர்செந் தூர்க்கு  ளுறைவோனே
நவமாமணி வடமும் பூத்த
தனமாதெனு மிபமின் சேர்க்கை
நழுவாவகை பிரியங் காட்டு  முருகோனே

அகமேவிய நிருதன் போர்க்கு
வரவேசமர் புரியுந் தோற்ற
மறியாமலு மபயங் காட்டி  முறைகூறி
அயிராவத முதுகின் தோற்றி
யடையாமென இனிதன் பேத்து
மமரேசனை முழுதுங் காத்த  பெருமாளே.

64. முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
முறுவ லுஞ்சி வந்த  கனிவாயும்
முருக வீழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
முகிலு மின்ப சிங்கி  விழிவேலும்

சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த
திருமு கந்த தும்பு  குறுவேர்வும்
தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று
செயல ழிந்து ழன்று  திரிவேனோ

மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை  வடிவேலா
வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
மணிவ டம்பு தைந்த  புயவேளே

அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
மலறி வந்து கஞ்ச  மலர்மீதே
அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற
அரிய செந்தில் வந்த  பெருமாளே.

65. மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல்  தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளி  யிளையோடும்

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி  ரலையாமுன்
கூற்றத் தத்துவ பொற்கழல்
கூட்டிச் சற்றருள்  புரிவாயே

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர்  குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
காப்புக் குத்திர  மொழிவோனே

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர  முருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
வாய்க்குட் பொற்பமர்  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 
temple news
306. முகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனுமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar