Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புகழ் பகுதி-2 திருப்புகழ் பகுதி-4 திருப்புகழ் பகுதி-4
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-3
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
03:03

124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலே
தனையர் அனைதமர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ யிடர்படு  துயர்தீர

அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுன  திருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெறமர கதமயில் மிசைவர  இசைவாயே

சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது
திருடி யடிபடு சிறியவ னெடியவன்  மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு வுடையவ
னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
திமித திமிதிமி யெனநட மிடுமரி  மருகோனே

பகர புகர்முக மதகரி யுழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
பரம குருபர இமகிரி தருமயில்  புதல்வோனே
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில் திகழ்
பழநி மலைவரு புரவல அமரர்கள்  பெருமாளே.

125. முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென இயலென மயிலென
முறுவல் தளவென நடைமட வனமென  இருபார்வை
முளரி மடலென இடைதுடி யதுவென
அதர மிலவென அடியிணை மலரென
மொழியு மமுதென முகமெழில் மதியென  மடமாதர்

உருவ மினையன எனவரு முருவக
வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய
வுலையின் மெழுகென வுருகிய கசடனை  யொழியாமல்
உலகை தருகலை பலவுணர் பிறவியி
னுவரி தனிலுறு மவலனை யசடனை
உனது பரிபுர கழலிணை பெறஅருள்  புரிவாயே

அரவ மலிகடல் விடமமு துடனெழ
அரிய யனுநரை யிபன்முத லனைவரும்
அபய மிகவென அதையயி லிமையவ  னருள்பாலா
அமர்செய் நிசிசர ருடலவை துணிபட
அவனி யிடிபட அலைகடல் பொடிபட
அமரர் சிறைவிட அடலயில் நொடியினில்  விடுவோனே

பரவு புனமிசை யுறைதரு குறமகள்
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முள ரியின்வரு  முருகோனே
பரம குருபர எனுமுரை பரசொடு
பரவி யடியவர் துதிசெய மதிதவழ்
பழநி மலைதனி லினிதுறையமரர்கள்  பெருமாளே.

126. கனத்திறுகிப் பெருத்திளகிப்
பணைத்துமணத் திதத்துமுகக்
கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த்  தலமேராய்
கவட்டையுமெத் தடக்கிமதர்த்
தறக்கெருவித் திதத்திடுநற்
கலைச்சவுளித் தலைக்குலவிக்  களிகூருந்

தனத்தியர்கட் கிதத்துமிகுத்
தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
றவித்திழிசொற் பவக்கடலுற்  றயர்வாலே
சலித்தவெறித் துடக்குமனத்
திடக்கனெனச் சிரிக்கமயற்
சலத்தின்வசைக் கிணக்கமுறக்  கடவேனோ

புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
திருக்குதனக் குடத்தினறைப்
புயத்தவநற் கருத்தையுடைக்  குகவீரா
பொருப்பரசற் கிரக்கமொடுற்
றறற்சடிலத் தவச்சிவனிற்
புலச்சிதனக் கிதத்தைமிகுத்  திடுநாதா

சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
திகைத்துவிழக் கணப்பொழுதிற்
சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத்  துடையோனே
செருக்கொடுநற் றவக்கமலத்
தயற்குமரிக் கருட்புரிசைத்
திருப்பழநிக் கிரிக்குமரப்  பெருமாளே.

127. குறித்தமணிப் பணித்துகிலைத்
திருத்தியுடுத் திருட்குழலைக்
குலைத்துமுடித் திலைச்சுருளைப்  பிளவோடே
குதட்டியதுப் புதட்டைமடித்
தயிற்பயிலிட் டழைத்துமருட்
கொடுத்துணர்வைக் கெடுத்துநகக்  குறியாலே

பொறித்ததனத் தணைத்துமனச்
செருக்கினர்கைப் பொருட்கவரப்
புணர்ச்சிதனிற் பிணிப்பிடுவித்  திடுமாதர்
புலத்தலையிற் செலுத்துமனப்
ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
புரித்தருளித் திருக்கழலைத்  தருவாயே

பறித்தலைத் திருட்டமணக்
குருக்களசட் டுருக்களிடைப்
பழுக்களுகக் கழுக்கள்புகத்  திருநீறு
பரப்பியதத் திருப்பதிபுக்
கனற்புனலிற் கனத்தசொலைப்
பதித்தெழுதிப் புகட்டதிறற்  கவிராசா

செறித்தசடைச் சசித்தரியத்
தகப்பன்மதித் துகப்பனெனச்
சிறக்கவெழுத் தருட்கருணைப்  பெருவாழ்வே
திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத்
தடுத்தடிமைப் படுத்தஅருட்
டிருப்பழநிக் கிரிக்குமரப்  பெருமாளே.

128. கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு
கனதனம் விற்கச் சமைந்த மங்கையர்
கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடு  மின்பமூறிக்
கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு
மவச மிகுத்துப் பொருந்தி யின்புறு
கலகம் விளைத்துக் கலந்து மண்டணை  யங்கமீதே

குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை
கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்
குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி  லங்கம்வேறாய்க்
குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர
முகதல முத்துப் பொலிந்தி லங்கிட
கொடிய மயற்செய்ப் பெருந்த டந்தனில்  மங்கலாமோ

இலகிய சித்ரப் புனந்த னிந்துறை
குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி
னினிதுறு பத்மப் ணிந்தருள்  கந்தவேளே
எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி
யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு
மிகலர்ப் தைக்கத் தடிந்தி லங்கிய  செங்கைவேலா

பலவித நற்கற் படர்ந்த சுந்தரி
பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி
பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு  கின்றபாலைப்
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
பகரென இச்சித் துகந்து கொண்டருள்
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள்  தம்பிரானே.

129. முகிலன கத்திற் கமழ்ந்த வண்பரி
மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு
முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய  ரங்கமீதே
முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்
விழியிணை செக்கச் சிவந்து குங்கும
ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை  யெங்குமேவி

உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற
வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள
வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி  லொன்றிமேவி
ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற
முறுவளை யொக்கக் கலின்க லென்கவு
முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ  ழிந்திடாதோ

செகமுழு தொக்கப் பயந்த சங்கரி
அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம
சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு  மங்கைநீடு
திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண
கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்
திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை  யண்டமீதே

பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை
திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்
பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி  யன்புகூரும்
பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள்
பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள்  தம்பிரானே.

130. அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து  இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து  பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து  துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற  னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த  மகதேவர்
மனமகிழ் வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க  வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த  கழல்வீரா
பரமபத மாய செந்தில் முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த  பெருமாளே.

131. உலகபசு பாச தொந்த  மதுவான
உறவுகிளை தாயர் தந்தை  மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச  லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற  னருள்தாராய்

சலமறுகு பூளை தும்பை  யணிசேயே
சரவணப வாமு குந்தன்  மருகோனே
பலகலைசி வாக மங்கள்  பயில்வோனே
பழநிமலை வாழ வந்த  பெருமாளே.

132. கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து  மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து 
கவலைபெரி தாகி நொந்து  மிகவாடி

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று  மறியாமல்
அசனமிடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று
அநுதினமு நாண மின்றி  யழிவேனோ

உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்க
ருலகளவு மால்ம கிழ்ந்த  மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று  வருவோனே

பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூதுசென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த  குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீளவென்று
பழநிமலை மீதில் நின்ற  பெருமாளே.

133. சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
சுரதக்ரியை யால்வி ளங்கு  மதனூலே
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
தொழிலுடைய யானு மிங்கு  னடியார்போல்

அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து  நிறைவாகி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த  அருள்வாயே

பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து  பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற  னுறவோடே

எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன்  மருகோனே
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
இமயவள்த னால்ம கிழ்ந்த  பெருமாளே.

134. வனிதையுடல் காய நின்ற வுதிரமதி லேயு ருண்டு
வயிறில்நெடு நாள லைந்து  புவிமீதே
மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
வயதுபதி னாறு சென்று  வடிவாகிக்

கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
கனிவதுட னேய ணைந்து  பொருள்தேடிக்
கனபொருளெ லாமி ழந்து மயலின்மிக வேய லைந்த
கசடனெனை யாள வுன்ற  னருள்தாராய்

புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
புதல்வியித ழூற லுண்ட  புலவோனே
பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
புதியமயி லேறு கந்த  வடிவேலா

பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
பரமகலி யாணி தந்த  பெருவாழ்வே
பகையசுரர் மாள வென்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதி னின்ற  பெருமாளே.

135. மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
மதியொடுபி றந்து முன்பெய்  வதையாலே
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
மதலையென வந்து குன்றின்  வடிவாகி

இருமயல்கொ டுத்து வண்டு பொதுவையர கம்பு குந்து
இரவுபகல் கொண்டொ டுங்கி  யசடாகும்
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
னிணையடிவ ணங்க என்று  பெறுவேனோ

திருவொடுபெ யர்ந்தி ருண்ட னவமிசைநடந்தி லங்கை
திகழெரியி டுங்கு ரங்கை  நெகிழாத
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
செறிவுடன றிந்து வென்ற  பொறியாளர்

பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபத நண்ப ரன்பின்  மருகோனே
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
பழநிமலை வந்த மர்ந்த  பெருமாளே.

136. விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து
விழவதன மதிவி ளங்க  அதிமோக
விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து
விரகமயல் புரியு மின்பு  மடவார்பால்

இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த
இருளகல வுனது தண்டை  யணிபாதம்
எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி
யினியபுகழ் தனைவி ளம்ப  அருள்தாராய்

அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை
அழகி னொடு தழுவு கொண்டல்  மருகோனே
அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட
அமரர்சிறை விடுப்ர சண்ட  வடிவேலா

பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை
படர்சடையர் விடைய ரன்ப  ருளமேவும்
பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த
பழநிமலை தனில மர்ந்த  பெருமாளே.

137. இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி  லதுகூவ
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதன குரு வோராத அனையர்கொடு  வசைபேச

அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக  மெலிவானாள்
அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை  வருவாயே

நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன்  மருகோனே
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபரி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை  யருள்பாலா

பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக  மயில்வீரா
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர்  பெருமாளே.

138. இருகனக மாமேரு வோகளப துங்க
கடகடின பாடீர வாரமுத கும்ப
மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு  குவடேயோ
இலகுமல ரேவாளி யாகியஅ நங்க
னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த
இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து  தணியாமல்

பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து
தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து
பெரியதமி  ழேபாடி நாடொறுமி ரந்து  நிலைகாணாப்
பிணியினக மேயான பாழுடலை நம்பி
உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு
பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று  திரிவேனோ

கருணையுமை மாதேவி காரணிய நந்த
சயனகளி கூராரி சோதரிபு ரந்த
கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை  யருள்பாலா
கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு
மதிலினொடு மாமாட மேடைகள் துலங்கு
கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு  புரிவோனே

பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து
கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு
பலிதமென வேயேக மேமயிலில் வந்த  குமரேசா
பலமலர்க ளே தூவி யாரணந வின்று
பரவியிமை யோர்சூத நாடொறுமி சைந்து
பழநிமலை மீதோர்ப ராபரணி றைஞ்சு  பெருமாளே.

139. சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி  யணுகாதே
சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை யொழியாதே

மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது  மொருநாளே
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத  மருள்வாயே

நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
னளினமுற அணிசடையர் மெச்சிப்  ப்ரியப்படவு மயிலேறி
நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு  முருகோனே

குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
குவிமுலையு மணியிடைபு மெச்சிப் புணர்ச்சிசெயு மணவாளர்
குறுமுனிவ னிருபொழுதும் அர்ச்சித்து செப்புத் தமிழ்க்கினிய
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு  பெருமாளே.

140. சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத  லொருவாழ்வே
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய  உணராதே

கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
பொரமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
கருதவரி யாவஞ்ச  கக்கபட மூடியுடல்  வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன  தருள்தார்ய்

ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம  ருளவோனே
உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக
முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு  குருநாதா

பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு  திறலோனே
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர்  பெருமாளே.

141. தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம் வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே-
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும் வயதுக்கேது தாரீர்சொ லீரெனவும் விதியாதே;

உலைவறவி ருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடியினிற்சூட வேநாடு மாதவர்க ளிருபாதம்-
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்;

அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமடி துணித்தாவி யேயான சாநகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு மருகோனே-
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேயெனவும் வருவோனே;

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசரண வித்தார வேலாயு தாவுயர் செய்
பரண்மிசை குறப்பாவை தோள் மேவ மோகமுறு மணவாளா-
பதுமவய லற்பூக மீதேவ ரால்கள்துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவரு கற்பூர கோலாக லாவமரர் பெருமாளே;

142. கலக வாள்விழி வேலோ சேலோ
மதுர வாய்மொழி தேனோ பாலோ
கரிய வார்குழல் காரோ கானோ  துவரோவாய்
களமு நீள்கமு கோதோள் வேயோ
உதர மானது மாலேர் பாயோ
களப வார்முலை மேரோ கோடோ  இடைதானும்

இழைய தோமலர் வேதா வானோ
னெழுதி னானிலை யோவாய் பேசீ
ரிதென மோனமி னாரே பாரீ  ரெனமாதர்
இருகண் மாயையி லேமூழ் காதே
யுனது காவிய நூலா ராய்வேன்
இடர்ப டாதருள் வாழ்வே நீயே  தரவேணும்

அலைவி லாதுயர் வானோ ரானோர்
நிலைமை யேகுறி வேலா சீலா
அடியர் பாலரு ளீவாய் நீபார்  மணிமார்பா
அழகு லாவுவி சாகா வாகா
ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா
ரயலு லாவிய சீலா கோலா  கலவீரா

வலபை கேள்வர்பி னானாய் கானார்
குறவர் மாதும ணாளா நாளார்
வனச மேல்வரு தேவா மூவா  மயில்வாழ்வே
மதுர ஞானவி நோதா நாதா
பழநி மேவுகு மாரா தீரா
மயுர வாகன தேவா வானோர்  பெருமாளே.

143. கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ  விழிவேலோ
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
கொங்குற் றுயரல்கு வரவோ ரதமோ  எனுமாதர்

திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
தந்தித் திரிகிட கிடதா எனவே
சிந்திப் படிபயில்  நடமா டியபா  விகள்பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு மிருசே வடியே
சிந்தித் திடமிகு மறையா கியசீ  ரருள்வாயே

வெந்திப் புடன்வரு மவுணே சனையே
துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே  தவவாழ்வே
விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
சஞ்சத் தயனுட னமரே சனுமே
விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே  லருள்கூர்வாய்

தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
செங்கட் கருமுகில் மருகா குகனே
சொந்தக் குறமகள் கணவா திறல்சேர்  கதிர்காமா
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்
துங்கப் பழநியில் முருகா இமையோர்  பெருமாளே.

144. ஆல காலமெ னக்கொலை முற்றிய
வேல தாமென மிக்கவி ழிக்கடை
யாலு மோகம்வி ளைத்துவி தத்துட  னிளைஞோரை
ஆர வாணைமெ யிட்டும றித்துவி
கார மோகமெ ழுப்பிய தற்குற
வான பேரைய கப்படு வித்ததி  விதமாகச்

சால மாலைய  ளித்தவர் கைப்பொருள்
மாள வேசிலு கிட்டு மருட்டியெ
சாதி பேதம றத்தழு வித்திரி  மடமாதர்
தாக போகமொ ழித்துஉ னக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட  அருள்வாயே

வால மாமதி மத்தமெ ருக்கறு
காறு பூளைத ரித்தச டைத்திரு
வால வாயன் ளித்தரு ளற்புத  முருகோனே
மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
வாளி யேவிய மற்புய னச்சுதன்  மருகோனே

நாலு வேதந விற்றுமு றைப்பயில்
வீணை நாதனு ரைத்தவ னத்திடை
நாடி யோடிகு றத்தித னைக்கொடு  வருவோனே
நாளி கேரம்வ ருக்கைய ழுத்துதிர்
சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
ஞான பூரண சத்தித ரித்தருள்  பெருமாளே.

145. ஓடி யோடி யழைத்துவ ரச்சில
சேடி மார்கள் பசப்பஅ தற்குமு
னோதி கோதி முடித்தவி லைச்சுரு  ளதுகோதி

நீடு வாச நிறைத்தஅ கிற்புழு
கோட மீது திமிர்த்தத னத்தினில்
நேச மாகி யணைத்தசி றுக்கிக  ளுறவாமோ

நாடி வாயும் வயற்றலை யிற்புன
லோடை மீதி னிலத்ததி வட்கையி
னாத கீதம லர்த்துளி பெற்றளி  யிசைபாடுங்

கோடு லாவிய முத்துநி ரைத்தவை
காவுர் நாடத னிற்பழ நிப்பதி
கோதி லாதகு றத்திய ணைத்தருள்  பெருமாளே.

146. சகடத்திற்  குழையிட் டெற்றிக்
குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்
புளகித்துக் குவளைக் கட்பொற்
கணையொத்திட் டுழலச் சுத்தித்
தரளப்பற் பவளத் தொட்டக்
களபப்பொட் டுதலிட் டத்திக்  குவடான

தனதுத்திப் படிகப் பொற்பிட்
டசையப்பெட் பசளைத் துப்புக்
கொடியொத்திட்  டிடையிற் பட்டைத்
தகையிற்றொட் டுகளப் பச்சைச்
சரணத்துக் கியலச் சுற்றிச்
சுழலிட்டுக் கடனைப் பற்றிக்  கொளுமாதர்

சுகமுற்றுக் கவலைப் பட்டுப்
பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்
குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்
பிணியுற்றுக் கசதிப் பட்டுச்
சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்
தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக்  கிடைநாளிற்

சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்
டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற் பலரைக் கட்டிக்
கரம்வைத்துத் தலையிற் குத்திச்
சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்
கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச்  சடமாமோ

திகுடத்திக் குகுடட் டுட்டுட்
டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத்
தகுடத்தத் தகுடத் தட்டுட்  டிடிபேரி

திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்
பகடிட்டுப் பறையொத் தக்கட்
டிகையெட்டுக் கடல்வற் றித்தித்
தரவுக்கக் கிரியெட் டுத்தைத்
தியருக்குச் சிரமிற் றுட்கச்
சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட்  டிடும்வேலா

பகலைப்பற் சொரியத் தக்கற்
பதிபுக்கட் டழலிட் டுத்திட்
புரமட்கிக் கழைவிற் புட்பச்
சரனைச்சுட் டயனைக் கொத்திப்
பவுரிக்கொட் பரமர்க் குச்சற்
குருவொத்துப் பொருளைக் கற்பித்  தருள்வோனே

பவளப்பொற் கிரிதுத் திப்பொற்
றன கொச்சைக் கிளிசொற் பற்றிப்
பரிவுற்றுக் கமலப் புட்பத்
திதழ்பற்றிப் புணர்சித் ரப்பொற்
படிகத்துப் பவளப் பச்சைப்
பதமுத்துப் பழநிச் சொக்கப்  பெருமாளே.

147. முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு
முற்பக்கத் திற்பொற் புற்றிட  நுதல்மீதே
முக்யப்பச் சைப்பொட் டிட்டணி
ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை
முச்சட்டைச் சித்ரக் கட்டழ  கெழிலாடத்

தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்
நச்சுக்கட் கற்புச் சொக்கியர்
செப்புக்கொக் கக்கச் சுப்பெறு  தனமேருத்
திட்டத்தைப் பற்றிப் பற்பல
லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்
சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி  யுழல்வேனோ

மெத்தத்துக் கத்தைத் தித்தியி
னிச்சித்தத் திற்பத் தத்தொடு
மெச்சிக்சொர்க் கத்திற் சிற்பர  மருள்வாயே
வித்தைக்குக் கர்த்ருத் தற்பர
முக்கட்சித் தர்க்குப் புத்திர
விச்சித்ரச் செச்சைக் கத்திகை  புனைவோனே

நித்யக்கற் பத்திற் சித்தர்க
ளெட்டுத்திக் குக்குட் பட்டவர்
நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள்  அமரோரும்
நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு
முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ
நிக்குட்பட் டத்துக் குற்றுறை  பெருமாளே.

148. அகல்வினை யுட்சார் சட்சம
யிகளொடு வெட்கா தட்கிடு
மறிவிலி வித்தா ரத்தன  மலிகாரம்
அகில்கமழ் கத்தூ ரித்தனி
யணைமிசை கைக்கா சுக்கள
வருள்பவர் நட்பே கொட்புறு  மொருபோதன்

பகலிர விற்போ திற்பணி
பணியற விட்டா ரெட்டிய
பரமம யச்சோ திச்சிவ  மயமாநின்
பழநித னிற்போ யுற்பவ
வினைவிள கட்சேர் வெட்சிகு
ரவுபயில் நற்றாள் பற்றுவ  தொருநாளே

புகலிவ னப்பே றப்புகல்
மதுரைமன் வெப்பா றத்திகழ்
பொடிகொடு புற்பாய் சுற்றிகள்  கழுவேறப்
பொருதச மர்த்தா குத்திர
துரகமு கக்கோ தைக்கிடை
புலவரில் நக்கீ ரர்க்குத  வியவேளே

இகல்படு நெட்டூர் பொட்டெழ
இளநகை யிட்டே சுட்டரு
ளெழுபுவி துய்த்தார் மைத்துனர்  மதலாய்வென்
றிடரற முப்பால் செப்பிய
கவிதையின் மிக்கா ரத்தினை
யெழுதிவ னத்தே யெற்றிய  பெருமாளே.

149. அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென  அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்கௌன
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு  சம்ப்ரதாயம்

உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை  வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை  நம்புவேனோ

ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுக தகுதகுகு தந்தத்த தந்தகுகு  திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக  என்றுதாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண  துங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள்  தம்பிரானே.

150. அரிசன வாடைச் சேர்வைகு ளித்துப்
பலவித கோலச் சேலையு டுத்திட்
டலர்குழ லோதிக் கோதிமு டித்துச்  சுருளோடே
அமர்பொரு காதுக் கோலைதிருத்தித்
திருநுதல் நீவிப் பாளித பொட்டிட்
டகில்புழு காரச் சேறுத னத்திட்  டலர்வேளின்

சுரத விநோதப் பார்வைமை யிட்டுத்
தருணக லாரத் தோடைத ரித்துத்
தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட்  டிளைஞோர்மார்
துறவினர் சோரச் சோரந கைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசைய ளித்தற்
றுயரற வேபொற் பாதமெ னக்குத்  தருவாயே

கிரியலை வாரிச் சூரரி ரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளிக ளிக்கக்
கிரணவை வேல்புத் தேளிர்பி ழைக்கத்  தொடுவோனே
கெருவித கோலப் பாரத னத்துக்
குறமகள் பாதச் சேகர சொர்க்கக்
கிளிதெய்வ யானைக் கேபுய வெற்பைத்  தருவோனே

பரிமள நீபத் தாரொடு வெட்சித்
தொடைபுனை சேவற் கேதன துத்திப்
பணியகல் பீடத் தோகைம யிற்பொற்  பரியோனே
பனிமல ரோடைச் சேலுக ளித்துக்
ககனம ளாவிப் போய்வரு வெற்றிப்
பழநியில் வாழ்பொற் கோமள சத்திப்  பெருமாளே.

151. அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு  முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு  வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது  நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது  தருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுக  வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக  ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு  தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை  பெருமாளே.

152. அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து  விலைபேசி
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
அதிகமா வுதவிக்கை  வளையாலே

உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த  மடவாரோ
டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி  தரவேணும்

மறவர்மா தொருரத்ந விமலகோ கனகத்தி
மயிலனாள் புணர்செச்சை  மணிமார்பா
மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர  வடிவேலா

பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி  யெமதாயி
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற  பெருமாளே.

153. ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம்  என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய  தென்றுநாளும்

எறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன  தென்றுமோதும்
ஏழைகள் யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு  மென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை  தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும  டங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி  அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக  தம்பிரானே.

154. இத்தா ரணிக்குள்மனு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டோடு மெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்களுடனுறவாசி

இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள்
தேடிச் சுகந்த அணை மீதில் துயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் தொளைந்துசில  பிணியதுமூடிச்

சத்தான புத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றார்கள் சுற்றியழ வுற்றார்கள் மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென  எடுமெனவோடிச்

சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத்தைஇன் றுதர  இனிவரவேணும்

தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாத்த செந்திகுத தீதத்த செந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகக் கிணங்கிணெண  ஒருமயிலேறித்

திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர்  அணிதிருமார்பா

மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட்ட கொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற்கு மன்புடைய  மருமகனாகி

வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
யத்தா பரத்தையறி வித்தாவி சுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட்ட மைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழ்வுக் குகந்தடிய ராவிக்குள் நின்றுலவி  வருபெருமாளே.

155. இலகிய களபசு கந்த வாடையின்
ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை  யிதமாகக்

கலவியி லவரவர் தங்கள் வாய்தனி
லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவது மெந்த நாளது  பகர்வாயே

சிலைதரு குறவர்ம டந்தை நாயகி
தினைவன மதனிலு கந்த நாயகி
திரள்தன மதனில ணைந்த நாயக  சிவலோகா

கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ
அயிலயி லதனையு கந்த நாயக
குருபர பழநியி லென்று மேவிய  பெருமாளே.

156. இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
மிருவிழியெ னஞ்சு  முகமீதே
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
மிலகியக ரும்பு  மயலாலே

நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
நெகிழுமுயிர் நொந்து  மதவேளால்
நிலையழிவு நெஞ்சி லவர்குடிபு குந்த
நினைவொடு மிறந்து  படலாமோ

புலவினைய ளைந்து படுமணிக லந்து
புதுமலர ணிந்த  கதிர்வேலா
புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை
பொரமுகையு டைந்த  தொடைமார்பா

பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
பருமயில டைந்த  குகவீரா
பணைபணிசி றந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த  பெருமாளே.

157. உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு நெகிழ்வதிலை யெனவேசூள்
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
துடைத்தாய்பின் வருகுமவ  ரெதிரேபோய்ப்

பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள்  விலைமாதர்
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை  வரவேணும்

தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி  மருகோனே
தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர்  தருவாழ்வே

செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது
செயித்தோடி வருபழநி  யமர்வோனே
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி  பெருமாளே.

158. ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத்  துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித்  தறியேனே

பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக்  குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப்பாடைத்  தவிரேனோ

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப்  பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப்  பெருமாளே

விருதுகவி விதரணவி நோதக் காரப்  பெருமாளே
விறன்மறவர்சிறுமிதிரு வேளைக்காரப்  பெருமாளே.

159. ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத  பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ  ரதுபோய்பின் 

வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல  மதுவாக
மருவிய பரம  ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத  மருள்வாயே

திரபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான  குருநாதன்
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத  னருள்பாலா

சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான  அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு  பெருமாளே.

160. கடலை பொரியவரை பலகனி கழைநுகர்
கடின குடவுதர  விபரீத
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது  துணைவோனே

வடவ ரையின் முகடு அதிர வொருநொடியில்
வலம்வரு மரகத  மயில்வீரா
மகபதி தருசுதை குறமினொ டிருவரு
மருவுச ரசவித  மணவாளா

அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட  எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிறு மயிலைவிடு
மரகர சரவண  பவலோலா

படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுபதி வரநதி  அழகான
பழநிம லையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு  பெருமாளே.

161. கதியை விலக்கு மாதர்கள் புதியஇ ரத்ன பூஷண
கனதன வெற்பு மேல்மிகு  மயலான
கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய
கனதன மொத்த தோகையு  முகமாறும்

அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்
அரவுபி டித்த தோகையு  முலகேழும்
அதிரவ ரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமு  மறவேனே

இரவிகு லத்தி ராசத மருவியெ திர்த்து வீழ்கடு
ரணமுக சுத்த வீரிய  குணமான
இளையவ னுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற
இதமொட ளித்த ராகவன்  மருகோனே

பதினொரு ருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொடு நிற்கு மீசுர  சுரலோக
பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய  பெருமாளே.

162. கரிய மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம்
கணைகொ லோஅயில் வேலது வோவிழி  யிதழ்பாகோ
கமுகு தானிக ரோவளை யோகளம்
அரிய மாமல ரோதுளி ரோகரம்
கனக மேரது வோகுட மோமுலை  மொழிதேனோ

கருணை மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரொரு நூலது வோவென
கனக மாமயில் போல்மட வாருடன்  மிகநாடி
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
வதனின் மேலென தாவியை நீயிரு
கமல மீதினி லேவர வேயருள்  புரிவாயே

திரிபு ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும்
சிவசொ ரூபம கேசுர னீடிய  தனயோனே
சினம தாய்வரு சூரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவு மேவடி வேல்விடு  முருகோனே

பரிவு சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலரி நாரணர்
பழைய மாயவர் மாதவ னார்திரு  மருகோனே
பனக மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை  பெருமாளே.

163. கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற்
கயல்விழிப் பார்வையிற்  பொருள்பேசிக்
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
கலதியிட் டேயழைத்  தணையூடே

செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
றிறமளித் தேபொருட்  பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதத் தேபதித்  தருள்வாயே

திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்
சிறிதருட் டேவருட்  புதல்வோனே
திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்
திருடர்கெட் டோடவிட்  டிடும்வேலா

பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
படியினிட் டேகுரக்  கினமாடும்
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
பரிவுறச் சேர்மணப்  பெருமாளே.

164. கருகி யகன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று  துதிபேசிக்
கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு  பலநாளும்

விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று  தளராதே
விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
விதபத மென்று  பெறுவேனோ

முருக கடம்ப குறமகள் பங்க
முறையென அண்டர்  முறைபேச
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற  வடிவேலா

பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி  மயில்வீரா
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய மர்ந்த  பெருமாளே.

165. கருப்புவிலில் மருப்பகழி
தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய்  மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற
மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில்  மருளாமே

ஒருப்படுதல் விருப்புடைமை
மனத்தில்வர  நினைத்தருளி
யுனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு  அருளாலே
உருத்திரனும் விருத்திபெற
அநுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்துபொருள்
உணர்த்துநா ளடிமையு  முடையேனோ

பருப்பதமு முருப்பெரிய
அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு  முருகோனே
பதித்தமர கதத்தினுட
னிரத்தினமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி  வயலூரா

திருப்புகழை யுரைப்பவர்கள்
படிப்பவர்கள் மிகடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ்  குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில்
புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகிய  பெருமாளே.

166. கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர்  உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க  ளதனாலே

சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான  வுபதேசந்
தெரிதர விளக்கி ஞான தரிசன மளித்த வீறு
திருவடி யெனக்கு நேர்வ  தொருநாளே

கொலையுற எதிர்த்த கோர இபமுக அரக்க னோடு
குரகத முகத்தர் சீய  முகவீரர்
குறையுட லெடுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை  விடுவோனே

பலமிகு புனத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமள தனத்தில் மேவு  மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர்  பெருமாளே.

167. கனக கும்பமி ரண்டு நேர்மலை
யெனநெ ருங்குகு ரும்பை மாமணி
கதிர்சி றந்தவ டங்கு லாவிய  முந்துசூதம்
கடையில் நின்றுப ரந்து நாடொறு
மிளகி விஞ்சியெ ழுந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை  யின்பமாக

அனைவ ருங்கொளு மென்று மேவிலை
யிடும டந்தையர் தங்கள் தோதக
மதின்ம ருண்டு துவண்ட வாசையில்  நைந்துபாயல்
அவச மன்கொளு மின்ப சாகர
முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி
தருப தங்கதி யெம்பி ரானருள்  தந்திடாயோ

தனத னந்தன தந்த னாவென
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென  வுந்துதாளந்
தமர சஞ்சலி சஞ்ச லாவென
முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கி ணாரமு  முந்தவோதும்

பணிப தங்கய மெண்டி சாமுக
கரிய டங்கலு மண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக  என்றுதோகை
பவுரி கொண்டிட மண்டி யேவரு
நிசிச ரன்கிளை கொன்ற வேலவ
பழநி யங்கிரி யின்கண் மேவிய  தம்பிரானே.

168. குருதி மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு முளைசளி  யுடலூடே
குடிக ளெனபல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதை  யடல்பேணி

மருவி மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில்  மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத  மருள்வாயே

நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெரிய கிரிகட லெரிய வுருவிய  கதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முனிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி  மயிலோனே

பருதி மதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவ  ளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக
ளபய மெனவணை பழநி மருவிய  பெருமாளே.

169. குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
குமுத வதரமு  றுவலாரம்
குழைம கரம்வளை மொழிகு யிலமுது
குயமு ளரிமுகை  கிரிசூது

விழிக யலயில்ப கழிவ ருணிகரு
விளைகு வளைவிட  மெனநாயேன்
மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி
வெறிது ளம்விதன முறலாமோ

கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
கழல்ப ணியவருள்  மயில்வீரா
கமலை திருமரு கமலை நிருதரு
கமலை தொளைசெய்த  கதிர்வேலா

பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலைமுரு  கவிசாகா
பரவு பரவைகொல் பரவை வணஅரி
பரவு மிமையவர்  பெருமாளே.

170. சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி
செங்கைகு லாவந டித்துத் தென்புற
செண்பக மாலைமு டித்துப் பண்புள  தெருவூடே
சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய
லம்புகள் போலவி ழித்துச் கிங்கியில்
செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி  விலைமாதர்

வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை
யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட
மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை  தனிலேறி
மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத  மருள்வாயே

இந்திர நீலவ னத்திற் செம்புவி
யண்டக டாகம ளித்திட் டண்டர்க
ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு  ளொருபேடி
இன்கன தேரைந டத்திச் செங்குரு
மண்டல நாடும ளித்துப் பஞ்சவ
ரின்புறு தோழ்மையு டைக்கத்தன்திரு  மருகோனே

சந்திர சூரியர் திக்கெட் டும்புக
ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய
சங்கர னார்செவி புக்கப் பண்பருள்  குருநாதா
சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு
கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர
தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய  பெருமாளே.

171. ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய  வரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி  விளையாடி

ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி  யிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட  அருள்தாராய்

தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங்க னெனது தாதை  ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கி னமல நாத  னருள்பாலா

கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
காடந்த மயிலி லேறு  முருகோனே
காமன்கை மலர்கள் நாண வேடம்பெணமளி சேர்வை
காணெங்கள் பழநி மேவு  பெருமாளே.

172. திடமிலிசற் குணமிலிநற் நிறிமிலியற்  புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க்  கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற்  றமிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப்  பெறவேணும்

கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப்  பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக்  கிறகோடே

படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக்  கொருபாலா
பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப்  பெருமாளே.

173. நிகமமெனி லொன்று மற்று நாடொறு
நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள  பெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர
நெடுதியதி குண்ட லப்ர தாபமு  முடையோராய்

முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
முடிவிலவை யொன்று மற்று வேறொரு  நிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர  அருள்வாயே

திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி விட்ட யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு  மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள்  கழுவேற

மகிதலம ணைந்த அத்த யோனியை
வரைவறம ணந்து நித்த நீடருள்
வகைதனைய கன்றி ருக்கு மூடனை  மலரூபம்
வரவரம னந்தி கைத்த பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ  பெருமாளே.

174. நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
குத்துமு லைக்குட மசைத்து வீதியி
னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர்  மொழியாலே
நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட
னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு  முறவாடி

உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க  ளுறவாமோ
உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன்
மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
உட்குளிர் புத்தியை யெனக்கு நீதர  வருவாயே

கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
கற்பனை பெற்பல அளித்த காரண  னருள்பாலா
கற்பந கர்க்களி றளித்த மாதணை
பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்
கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர  எனநாளும்

நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு  மருகோனே
நட்டுவர் மத்தள முழக்க மாமென
மைக்குல மெத்தவு முழக்க மேதரு
நற்பழ நிப்பதி செழிக்க மேவிய  பெருமாளே.

175. பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை  பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு  சதிகாரர்

அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியதறி யாதபுக  ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள்  புரிவாயே

வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி  முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்
மங்க ளாயிசந் தானசிவ காமியுமை  யருள்பாலா

கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச
கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர  அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர  பெருமாளே.

176. பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
வடிவமார் புளகித கும்ப மாமுலை
பெருகியே யொளிசெறி தங்க வாரமு  மணியான
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ  வருமானார்

உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகியெ
யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள்  மயலாலே
உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுகிட இன்ப ஞானம  தருள்வாயே

அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ
கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
அடலதோ டமர்புரி கின்ற கூரிய  வடிவேலா
அரகரா வெனமிக அன்பர் சூழவெ
கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ
அவனியோர் நொடிவரு கின்ற காரண  முருகோனே

பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ
உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ
பசியதோ கெடவருள் கொண்ட மாயவன்  மருகோனே
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ
வனசமா மலரினில் வண்டு லாவவெ
பழநிமா மலைதனி லென்று மேவிய  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 
temple news
306. முகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனுமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar