349.நெறித்துப் பொருப்புக் கொத்த முலைக்குத் தனத்தைக் கொட்டி நிறைத்துச் சுகித்துச் சிக்கி வெகுநாளாய் நினைத்துக் கொடத்துக் கத்தை யவத்தைக் கடுக்கைப் பெற்று நிசத்திற் சுழுத்திப் பட்ட அடியேனை
இறுக்கிப் பிடித்துக் கட்டி யுதைத்துத் துடிக்கப் பற்றி யிழுத்துத் துவைத்துச் சுற்றி யமதூதர் எனக்குக் கணக்குக் கட்டு விரித்துத் தொகைக்குட் பட்ட இலக்கப் படிக்குத் தக்க படியேதான்
முறுக்கித் திருப்பிச் சுட்டு மலத்திற் புகட்டித் திட்டி முழுக்கக் கலக்கப் பட்டு அலையாமல் மொழிக்குத் தரத்துக் குற்ற தமிழக்குச் சரித்துச் சித்தி முகத்திற் களிப்புப் பெற்று மயிலேறி
353. சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமுத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம் ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதா குருநாதா