பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
புதுச்சேரி: எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் நாளை உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. திருவிசலூர் ஸ்ரீதரவேங்கடேச அய்யாவாள் கங்காவதரண மகோத்சவம், வரும் 23ம் தேதி அன்னதானம், பஜனை, சங்கீத கச்சேரியுடன் துவங்கி, டிசம்பர் 2ம் தேதி கங்காஸ்நானத்துடன் நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு, புதுச்சேரியில் நாளை(10ம் தேதி) உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தினத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரெயின்போ நகர் சுமூக விநாயகர் கோவிலில் காலை 7:15 மணி முதல் 8:00 வரையும், பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் காலை 8:15 முதல் 9:00 வரையும், குறிஞ்சி நகர் வலம்புரி ஞானவிநாயகர் கோவிலில் காலை 9:15 மணி முதல் 10:15 வரையும், எல்லைபிள்ளைச்சாவடி சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் காலை 10:30 மணி முதல் பகல் 12:30 வரையும் உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்று, பொருளுதவி மற்றும் நிதி உதவி செய்யலாம் என இதுகுறித்து புதுச்சேரி கிருஷ்ணபிரேமிக பஜனை மண்டலியினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் விபரங்களுக்கு 94430 89747, 94423 96095 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, புதுச்சேரி கிருஷ்ணபிரேமிக பஜனை மண்டலியினர் தெரிவித்தனர்.