திருபுவனை: திருவாண்டார்கோவில் பாலமுருகன் கோவிலில் 19ம் ஆண்டு சூரசம்ஹார விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி காலை 9:00 மணிக்கு அம்மன், விநாயகர், பாலமுருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மன், விநாயகர், பாலமுருகன் சுவாமிகள் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.