Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்ற தலைமுறை பாவச்சுமையைக் குறைக்க ... ருத்ராட்சம் தரிக்கும் இடங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் ..
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2013
12:11

*சிந்தை கலங்காதவர்கள், மனம் குழப்பமடையாதவர்கள்,பாவ புண்ணியம் பற்றி சிந்திக்காதர்களுக்கு அச்சம் என்பது அணுவளவும் இல்லை.
*தவறான கொள்கைகளைத் தழுவி, தீய பாதையில்செல்பவர்களே அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சியும், அஞ்ச வேண்டியதற்குஅஞ்சாதவராயும் இருப்பர்.
*உடல், நாக்கு, மனம் ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள அறிவாளிகளே உண்மையான நல்ல அடக்கம் உடைவர்கள்.
*அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை.
*இரும்பிலிருந்து தோன்றும் துரு இரும்பை அழிப்பதுபோல், அறநெறியில் தவறியவனை அவனது செயல்களை அழித்துவிடும்.
*அதிகமாகப் பேசுவதால் மட்டும் ஒரு அறிஞனாகிவிட மாட்டான்.
*அறியாமையுடன் தன்னடக்கமில்லாமல் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, அறிவுடன், தன் நினைவோடு ஒரே நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
*கொடிய நஞ்சைப் போன்ற ஆசை எவரைப் பிடித்துக் கொள்கிறதோ, அவருக்கு காட்டுப் புல்லைப்போல துக்கம் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
*தூய்மையான எண்ணத்துடன் ஒருவர் பேசினாலும், செயல் புரிந்தாலும், அவரது நிழல் போல மகிழ்ச்சி அவனைப் பின்தொடர்ந்து செல்கிறது. அதேபோல் தீய எண்ணத்துடன் ஒருவர் பேசினாலும்,செயல்புரிந்தாலும், மாட்டின் காலைப்பின்பற்றும் வண்டிச்சக்கரம் போல, துக்கம் அவனைப் பின்பற்றிச்செல்கிறது.
*சோம்பேறிகள் வெறும் பேச்சே பேசுகிறார்கள். சுதந்திர உலகில் வாழ்வது போல் கனவு கண்டு கொண்டு, சுதந்திரம் கிடைக்கவில்லையே என ஏங்குகிறார்கள். அவர்களால் ஒருபோதும் அறிவு வழியைக் காண முடியாது.
*மலரின் வண்ணத்துக்கோ, நறுமணத்துக்கோ குறை நேராமல் வண்டு தேனைச் சேகரிக்கிறது. அதுபோல், பிறரைப்புண்படுத்தாமல் நல்லதை எடுத்துரைக்க வேண்டும்.
*முட்டாளின் தோழமையைவிட, ஒருவன் தனிமையில் வாழ்வது எவ்வளவோமேலானது.
*என் உடல் நோய்பிடித்திருந்தாலும் என் மனம் நோய் பிடித்ததாக இருக்கக்கூடாது என்று நீங்களே உங்களை பயிற்சி செய்துகொள்ள வேண்டும்.
*எந்தக் காலத்திலும்பகைமையை வெல்லக்கூடிய ஆயுதம் அன்பு ஒன்றே.
*சேற்றில் விழுந்தயானையைத் தூக்கிவிடுவதுபோல், உங்கள்மனத்தைத் தீயவழியிலிருந்து நீங்கள்மீட்டுக் கொள்ளுங்கள்.
*உங்கள் நல்ல எண்ணங்களைசோர்வடையாமல் கட்டிக்காத்துக்கொள்ளுங்கள்.
*புயலுக்கும்அசையாதபாறையைப் போல,அறிவாளி புகழுக்கும் இகழ்ச்சிக்கும்அசைந்துகொடுப்பதுஇல்லை.
*தவறானவழியில்செல்லும்மனமே, விரோதியைக்காட்டிலும் பெரும் தீமையைச் செய்யும். அது நமக்குள் இருந்து கொண்டேநன்மையைத் தராது.
*கோபத்தை நயத்தாலும், தீமையை நன்மையாலும்,கருமியை ஈகையாலும், பொய்யனை உண்மையாலும் வெல்ல வேண்டும்.
*தன்னைத்தானே வெற்றி கொள்பவனே, போரில்ஆயிரம் பேரை அழித்து வெற்றிபெற்றவனை விட சிறந்தவன்.
-புத்தர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar