பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
கரூர்: கரூரில் ஸ்ரீ சத்ரு சம்ஹாரமூர்த்தி ஸ்வாமிகள் கோவில் மண்டலாபிஷேக விழா மற்றும் சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹாரமூர்த்தி ஸ்வாமிகள் கோவிலில் நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன், மண்டலாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, 1,008 சங்காபிஷேக விழாவை, சுந்தரவேல் ஸ்வாமிகள் துவக்கி வைத்தார். பிறகு, பொன்பாண்டுரங்க ஸ்வாமிகள், வள்ளலார் ஞானசபை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஆகியோர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் ஆர்.டி.ஓ., நெல்லைவேந்தன், தாசில்தார் ராஜமாணிக்கம், தீயணைப்பு அலுவலர் தியாகராஜன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றனர்.