ஆம்பூர்: ஆம்பூர் நாகநாதசுவாமி கோவிலில் கந்த சஷ்டியின் நிறைவாக முருகன்– வள்ளி திருமணம் நடந்தது. விழாவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அங்காரம் செய்யப்பட்டு வள்ளியை திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.